யாழ்பாணத்தில்அல்பிரட் துரையப்பா மைதானத்தை
காணொலி மூலம் திறந்து வைத்தார் மோடி
யாழ்ப்பாணத்தில்
இந்திய நிதியுதவியுடன் புதுப்பித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை இந்திய
பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பிரன்சிங் மூலம்
திறந்து வைத்தார்.
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன நேரடியாகவும், இந்திய பிரதமர்
நரேந்திர மோடி
புது டில்லியில்
இருந்து video conferencing மூலமும் கூட்டாக
மைதானத்தை திறந்து
வைத்துள்ளனர்
யாழ்பாணத்தில்
பல ஆண்டுகளாக
கவனிப்பின்றி கிடந்த விளையாட்டு மைதானம் இந்திய
அரசின் முயற்சியால்
சீரமைக்கப்பட்டது. இதன் திறப்பு
விழா இன்று
நடைபெற்றது. இதில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் மோடி,
டில்லியில் இருந்தபடி வீடியோ கான்பிரன்சிங் மூலம்
மைதானத்தை திறந்து
வைத்தார்.
சுமார்
2000 பேர் வரை
அமரும் திறன்
கொண்ட இந்த
மைதானத்தில் இந்த ஆண்டு சர்வதேச யோகா
தினத்தன்று 1500 பேர் கலந்து கொள்ளும் யோகா
நிகழ்ச்சி நடைபெற
உள்ளது. சர்வதேச
யோகா தின
நிகழ்வுகளும் இன்றைய விழாவின் போது துவக்கி
வைக்கப்பட்டது.
யாழ்ப்பாண
நகரின் முன்னாள்
மேயர் அல்பிரட்
துரையப்பாவின் பெயர் சூட்டப்பட்ட குறித்த மைதானம்
கடந்த 1997ம்
ஆண்டு முதல்
பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில்,
இந்திய நிதியுதவியுடன்
7 கோடி ரூபாய்
செலவில் குறித்த
மைதானம் புதுப்பித்து
நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.