பிரிட்டனின்
அடுத்த பிரதமர் யார் ?
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கூறியிருப்பதால் அந்நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் 6 பேர் பெயர்கள் அடிபடுகிறது.
ஐரோப்பிய
யூனியனில் இருந்து
பிரிட்டன் வெளியேறும்
முடிவுக்கு ஆதரவாக 52 சதவீதம் பேர் கருத்து
தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பிரிட்டன்
பவுண்ட் மதிப்பு
பெரிதும் சரிந்தது.
இந்த
கருத்து கணிப்பு
வெளியானது முதல்
பிரிட்டனில் பரபப்பு ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக
ஐரோப்பிய யூனியனில்
இருந்து வரும்
பிரிட்டன் வெளியேற
வேண்டுமானால் இன்னும் 3 ஆண்டுகள் நடைமுறை தேவைப்படும்.
வெளியற வேண்டாம்
என கேட்ட
பிரதமர் கேமரூனுக்கு
ஆதரவு கிட்டவில்லை.
இதனால் தான்
பிரதமர் பொறுப்பில்
இருந்து விலகுவதாகவும்,
வரும் அக்டோபரில்
முழு அளவில்
வெளியேறுவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து
கேமரூனின் கன்சர்வேடிவ்
கட்சியில் 6 பேர் பெயர் அடிபடுகிறது. இதில்
3 பெண்கள், 3 ஆண்கள். இதில் லண்டன் முன்னாள்
மேயர் போரீஸ்
ஜான்சன் முதல்
இடத்தில் இருக்கிறார்.
ஐரோப்பிய யூனியனில்
இருந்து வெளியேறும்
முடிவுக்கு அவர் ஆதரவாக இருந்து வந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.
தெரசா மே,
ஜார்ஜ் ஆஸ்போர்ன்,
மைக்கேல் கோவ்,
நிக்கி மோர்கன்,
ஆந்திரேயாலீட்சம் ஆகியோர் பெயர்களும் அடிபடுகிறது.
0 comments:
Post a Comment