“அழகியல் உணர்வுகளுக்கு உணவு”
கலைக் கண்காட்சி
கிழக்குப்
பல்கலைக்கழக, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள்
நிறுவகத்தின் நுண்கலைப் பட்டதாரியான செல்வி எம்.ஏ. நூருல்
அஸ்மாஹ்வின் கை வண்ணத்தில் உருவான “அழகியல்
உணர்வுகளுக்கு உணவு” கலைப் படைப்புக்களின்
கண்காட்சி அண்மையில்
கமு/கமு/
அல் மிஸ்பாஹ்
மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
கமு/கமு/அல்
மிஸ்பாஹ் மகா
வித்தியாலய அதிபரான யூ.எல்.எம்.
அமீன் தலைமையில்
நடைபெற்ற இக்கண்காட்சியினை,
கவிஞர் சோலைக்கிளி
பிரதம அதிதியாகக்
கலந்து கொண்டு
ஆரம்பித்து வைத்தார்.
இக்கலைக்கண்காட்சியைப்
பார்வையிட மாணவர்கள்
மற்றும் ஆசிரியர்கள்
ஆர்வத்துடன் வருகை தந்திருந்தனர்.
Msm Zahir
0 comments:
Post a Comment