வங்காளதேசத்தில் தீவிரவாதத்துக்கு எதிராக
ஒரு லட்சத்து ஓராயிரத்து 524 உலமாக்கள் கையொப்பமிட்டு
பத்வா
வங்காளதேசத்தில்
தீவிரவாதத்துக்கு எதிராக ஒருலட்சம் உலமாக்கள்
வன்முறை சம்பவங்கள் மற்றும் கொலைவெறி தாக்குதல்களைக்
கண்டித்து பத்வா என்னும் மார்க்க ஆணையை வெளியிட்டுள்ளனர். ‘
இஸ்லாமிய
சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி
நடைபெறும் வங்காளதேசத்தில்
கடந்த மூன்றாண்டுகளில்
சிறுபான்மை மதங்களை சேர்ந்த ஐம்பதுக்கும் அதிகமானோர்
கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த
கொலைகளுக்கு உள்ளூரை சேர்ந்த சில தீவிரவாத
குழுக்களும், அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளும்
பொறுப்பேற்றுள்ள நிலையில் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள்
மேலும் நிகழாமல்
தடுக்கும் வகையில்
தீவிரவாதிகளுக்கு எதிரான அதிரடி வேட்டையில் பத்தாயிரத்துக்கும்
அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,
மதசகிப்புத்தன்மையின்மையின் விளைவாக பெருகிவரும்
வன்முறை சம்பவங்கள்
மற்றும் கொலைவெறி
தாக்குதல்களையும் கண்டித்து அங்குள்ள உலமாக்கள்
பத்வா என்னும்
மார்க்க ஆணையை
வெளியிட்டுள்ளனர். ‘மனிதம் நலமாய்
வாழ அமைதி
நிலவ வேண்டும்’
என்ற தலைப்பில்
வெளியாகியுள்ள இந்த பத்வாவில் ஒரு லட்சத்து
ஓராயிரத்து 524 உலமாக்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
இந்த
பத்வாவை வெளியிட்ட
பின்னர் செய்தியாளர்களிடையே
பேசிய வங்காளதேசம்
ஜாமியத்துல் உலமா தலைவர் பரித் உத்தின்
மசூத், ‘சொர்க்கத்தை
அடைய வேண்டும்
என்ற தூண்டுதலில்
எந்தப் போராளிகளும்
அப்பாவி மக்களை
கொல்ல மாட்டார்கள்.
ஏனெனில், படுகொலை
என்பது நரகத்துக்கு
செல்லும் வழியேயன்றி,
சொர்க்கம் சென்றடையும்
மார்க்கம் அல்ல.
இதைப்போன்ற படுகொலைகளில் ஈடுபடுபவர்கள்
யாராக இருந்தாலும்
அவர்கள் இஸ்லாம்
மார்க்கம் மற்றும்
முஸ்லிம் மக்களுக்கு
மட்டும் எதிரானவர்கள்
அல்லர், ஒட்டுமொத்த
மனித குலத்துக்கே
அவர்கள் எதிரானவர்கள்’
என குறிப்பிட்டுள்ளார்.
இதைப்போன்ற
பத்வாக்கள் தீவிரவாதத்தை முழுமையாக கட்டுப்படுத்தாவிட்டாலும், பெருகிவரும் வன்முறை
சம்பவங்களை ஓரளவுக்கு கட்டுப்படுத்தும்
என நம்புவதாகவும்
அவர் தெரிவித்துள்ளார்
வங்காளதேசத்தில்
இந்த மாதத்தில்
மட்டும் இந்து
கோயில் பூசாரி,
மட நிர்வாகி,
கிறிஸ்தவரான ஒரு வியாபாரி ஆகியோர் அடுத்தடுத்து
கொல்லப்பட்டனர். இந்த கொலைவெறி தாக்குதலின் தொடர்ச்சியாக வங்காளதேசத்தின்
எல்லையோரம் அமைந்துள்ள இந்தியாவின் மேற்கு வங்காளம்
மாநிலத்தில் கோடரியால் வெட்டப்பட்ட நிலையில் இந்து
கோயில் பூசாரி
ஒருவர் சமீபத்தில்
பிணமாக கிடந்தார்.
0 comments:
Post a Comment