ஒலுவிலிலிருந்து அமைச்சர் ஹக்கீம் அவர்களுக்கு
ஓர் திறந்த மடல்

ஒலுவிலின் நிலைமை மாறுமா ?

தலைவர் ஹக்கீம் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்!
பாதிக்கப்பட்ட மக்களின் ஆதங்கம்!!

கெளரவ அமைச்சர் ஹக்கீம் அவர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்
மறைந்த மாமனிதர் சொன்னதை செய்யும் செய்வதை சொல்லும் எல்லோருடைய மனதிலும் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் மர்ஹும் அஸ்ரப் அவர்களால் வழி நடத்தப்பட்ட ஒரு கட்சிதான் முஸ்லிம் காங்கிரஸ்.
அவருக்கு பிறகு அந்த கட்சியை வழி நடாத்தும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையினால்! நீங்களும் அன்றிருந்து இன்று வரை தலைவராகவும் அமைச்சராகவும் பல ஆண்டுகளாக இருந்து சில கட்சித்தாவல் செய்தும் பல அமைச்சர் பதவியும் பெற்று தலைமையை அலங்கரித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
விமர்சனங்கள் பல இடங்களில் இருந்து வந்தாலும் அதுதான் உண்மை!
"அரசியல் நகர்வுகளை எல்லாம் வல்ல அல்லாஹ்தான் நன்கறிந்தவனாக இருக்கிறான்" தலைவரின் விருப்பம் மக்களின் வேண்டுகோள் அதிகமாக இருந்ததன் காரணத்தால் நீங்கள் மறைந்த தலைவரின் இடத்தில் இருக்க முடிந்தது. (அல்ஹம்துலில்லாஹ்)
!!ஆட்சி அதிகாரம் கொடுப்பதும் எடுப்பதும் இறைவன் நாடியபடிதான் நடக்கும்!!
அதே நேரம் உங்களுக்கு தெரியும் மர்ஹும் அஸ்ரப் அவர்களால் அதிகமாக நேசிக்கப்பட்ட அவருடைய இதயம் என்று சொல்ல கூடிய ஒரு பகுதிதான் கிழக்கு மாகாணம்.
அதிலும் ஒலுவில் ஊர் சற்று அதிகமாக பார்க்கப்பட்ட ஊர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை அவரின் முயற்சியின் கட்டமாக அவரின் நினைவாக.
ஒலுவில் துறைமுகம்,பல்கலைக்கழகம்,அவருக்காக கட்டப்பட்ட வீடு என்று இன்றும் காணப்படுகிறது. இதனால் ஒலுவில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை! மாறாக இழந்ததுதான் மிச்சம் அது ஒருபுறமிருக்க! இருக்கிறது என்பதுதான் எல்லோரும் அறிந்த உண்மை.
அன்றிலிருந்து இன்றுவரை ஒலுவிலைப் பொறுத்தவரை அரசியல் ரீதியாக முஸ்லிம் காங்கிரஸைத்தான் ஆதரித்து வந்துள்ளார்கள் அது அந்த மாமனிதரின் உண்மையான வீரத்தினாலும் மக்களை நேசிக்கும் அன்பினாலும்.
ஆனால் அன்று இருந்தத்தையும் இன்று உங்கள் காலத்தில் இருக்கின்றதையும் ஒப்பிட்டு பார்த்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது.
காரணம் வருங்காலத்தில் ஒலுவில் என்ற ஒரு ஊர் இருக்குமா? என்பதை கூட செல்ல முடியவில்லை!!
ஒரு பக்கத்தில் துறைமுகத்துக்கு நிலங்கள் எடுக்கப்பட்டது அதற்குரிய நக்ஷ்டயீடு மக்களுக்கு இன்னமும் ஒழுங்கான முறையில் கிடைக்கவில்லை.மறுபக்கத்தில் பல்கலைக்கழகத்துக்கு நிலங்கள் அடைக்கப்பட்டது அதில் எந்த தொழில் வாய்ப்பும் கிடைத்ததாக தெரியவில்லை. ஒரு புறத்தில் பெரும்பான்மை சமூகத்தால் நிலங்கள் பறிக்கப்பட்டது மக்கள் துரத்தப்பட்டார்கள் அவர்களுக்கு ஒரு துண்டு காணிகூட மீட்டுக்கொடுக்கவில்லை.
இலவு காத்த கிளி போல் நம்பிகொண்டிருக்கிறார்கள் மக்கள் இன்று கிடைக்கும் நாளை நடக்கும் என்று. நடந்ததாகவும் தெரியவில்லை கொடுப்பதாகவும் நம்பிக்கை இல்லை??
போதாக்குறைக்கு மிஞ்சியுள்ள நிலத்தையும் இயற்கையின் சீற்றத்தால் கடலோடு கடலாக உள்வாங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
அதற்காக சில கற்களை போட்டு ஏதே ஒரு கண்துடைப்பாக பாதியில் விடப்பட்டுள்ளது.
வெளிச்ச வீட்டுக்கு அருகாமையில் ஒரு அழகான வீதி எவ்வாறு இருந்தது என்று எங்களை விடவும் வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு நன்றாக தொரியும் அதன் அருமை ஆனால் இப்போது அது இருந்த இடமுமில்லை ஏன்??
இயற்கையின் அழிவை யாரும் தடுக்கமுடியாதுதான்!அனால் இயற்கை அழித்துச்சென்றதை சீர் செய்யலாம் இல்லையா அதுவும் இதுவரை செய்யாமல் இருப்பது ஏன்??
ஒலுவிலூருக்கு நடுவே ஒரு அழகான வளைந்த பாம்பு செல்லுவது போல் ஆறு சென்றது அது இப்போது கவனிப்பாரற்று ( வயிற்றில் இருக்கும் குழந்தையை நம்பி வெளியால் இருக்கும் குழந்தையை இல்லாமலாக்கியது போல்)
சும்மா கிடந்த ஆற்றை தோண்டி பாதியில் விடப்பட்டுள்ளது இப்போது துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது இதை பார்பதற்கோ கேட்பதற்கோ யாருமில்லை
எத்தனையோ உறுப்பினர்கள் இருந்தும்.
ஆனால் சாணக்கிய தலைவர் ஊருக்கு வருவதானால் வீதிகளை அலங்கரிக்கவும் பட்டாசி சுடுவதற்கும், பாடல் போடுவதற்கும் ஆட்கள் வைத்திருக்கிறீர்கள்!! ஆனால் ஊரில் உள்ள குறைகளை கண்டுகொள்ள எடுத்துச் சொல்லக் கூட யாருமில்லை அனாதையாக்கப்பட்டுள்ளது ஒலுவில். ஏன் இந்த நிலமை இந்த ஊருக்கு??
நீங்கள் ஒதுக்கும் நிதி போதாதா?
இல்லை ஒவ்வொரு தடவையும் வந்து வெறும் வாய் பேச்சில் மட்டும்தானா வீறாப்பு? இல்லை நீங்கள் ஒதுக்கும் நிதி உங்களை உற்சாகப்படுத்தும் வரவேற்கும் ஆதரவாளர்களுக்கும் மட்டும்தானா?
அப்படியென்றால் பொதுமக்களுக்கு ஊருக்கு ஒன்றும் உருப்படியாக செய்யாமல் இருப்பதன் அர்த்தம்தான் என்ன?
இப்படியல்லாம் நினைக்க தோணுது அல்லவா?
பணம் இருந்தால் எதுவும் செய்யலாம் என்ற நிலமைதான் இன்று காணப்படுகிறது.நீங்களும் பணத்தை உங்கள் ஆட்களின் மூலம் மக்களுக்கு கொடுத்து வாக்குகளை பணத்தின் மூலம் வாங்குகிறீர்கள் என்றுதான் நினைக்க தோணுகிறது!
காரணம் அந்த அளவுக்கு ஒலுவில் அபிவிருத்தியில் மிகவும் மோசமாக முறையில் பின் தங்கியுள்ளது அதனால்தான் மனம் நொந்து நான் உங்களுக்கு இதை எழுதுகிறேன்!
இதற்கெல்லாம் பதில் செல்ல வேண்டியது உங்கள் பொறுப்புத்தான்.
ஏன் என்றால் காலா காலம் உங்கள் தலைமையில் உள்ள "முஸ்லிம் காங்கிரஸ்"தான் வேதவாக்கு போல் நினைத்து ஆதரிக்கிறார்கள்.
நீங்கள் அதை செய்வீர்கள் இதை செய்வீர்கள் என்று கடைசியில் ஆப்புதான் மக்களுக்கு.
அந்த வகையில் ஒலுவிலும் விதிவிலக்கல்ல ஏமாற்றப்பட்டு கொண்டே இருக்கிறார்கள் இதுதான் உண்மை.
ஆனால் நீங்கள் கண்டுகொள்வதே இல்லை!ஓட்டு மட்டும்தான் உங்கள் இலக்கு போல அதனால்தான் நீங்கள் ஊருக்கு உருபடியாக ஒன்றும் செய்யாமல் உங்கள் உயர்பீட ஆதரவாளர்களை உறுப்பினர்களை திருப்திபடுத்தி நீங்கள் இலாபம் அடைகிறீர்கள்!
இனியாவது நீங்கள் இவ்வளவு நாளாக நம்பி அள்ளி அள்ளி போட்ட மக்களுக்கு கிள்ளியாவது கொடுப்பீர்களா? வெறுமனே வாக்குறுதிகளை மட்டும் அள்ளி வீசாமல்!!
வேறு ஊர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது ஒலுவில் அபிவிருத்தி என்ற விடயத்தில் மிகவும் மோசமாகத்தான் காணப்படுகிறது.
வேறு ஊர்களுக்கு அபிவிருத்தியை செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை அங்கு செய்வதில் ஒரு மூன்று வீதமாவது
ஒலுவிலுக்கும் கிடைக்க வேண்டும் அதுதான் மக்களின் எதிர்பார்பு உங்களின் கடமையும் கூட!
வெறுமனமே ஓட்டு மட்டும் போட்டு உங்களை பாராளுமன்றம் அனுப்பி விட்டு நீங்கள் செல்வதையல்லாம் பார்த்துக்கொண்டு உங்களை திறந்த வாகனத்தில் கூட்டி வந்து ஊரை சுத்தி கையை தூக்கி காட்டினால் மட்டும் போதாது தலைவர் அவர்களே.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றின் பங்காளியாக இருந்து பாராளுமன்ற பிரதிநிதிகளும் கிடைத்து இந்த நாட்டின் நல்லாட்சியின் பங்காளியாக நீங்களும் இருப்பதற்கு இந்த மக்கள் வழிவகுத்துள்ளார்கள்.
அந்தவகையில் உங்களுக்கு அமைச்சுப்பதவியும்(நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல்)கிடைத்து கடமைகளையும் பொறுப்பேற்று கொண்டிர்கள் அல்ஹம்துலில்லாஹ்.
"ஆட்சி அதிகாரம் கொடுப்பதும் எடுப்பதும் இறைவன் நாடிய படிதான் நடக்கும்"
கெளரவ தலைவர் அவர்களே நடந்தது நடந்தவையாக இருக்கட்டும்.நடக்கப் போவதாவது நல்லவையாக அமையட்டும்!
இந்த நல்லாட்சியிலாவது ஒலுவில்பிரதேசத்தை அன்று (அஸ்ரப்) காலத்தில் இருந்தது போல் உருவாக்கி கொடுப்பீர்களா ?
எடுத்த அமைச்சுக்களால் ஏதும் அபிவிருத்திகள் அல்லது மக்கள் இழந்த வளங்களையாவது சீர் செய்து தருவீர்களா?
இளைஞர்களுக்கு ஏதும் தொழில் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பீர்களா?
துறைமுகத்துக்கு இழந்த காணிகளுக்கு உரிய நக்ஷ்டயீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பீர்களா?
மீனவர்களின் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாமல் கடலரிப்பை நிரந்தரமாக தடை செய்து எங்கள் மண்ணை எங்களிடம் மீட்டுத்தருவீர்களா?
அந்த அழகான ஆற்றை உரியமுறைபடி வழமைபோல் ஓடி கடலை சங்கமித்து துர்நாற்றத்தை இல்லாமல் ஆக்குவதற்கு கண்திறப்பீர்களா?
கட்சி வேறுபாடின்றி தேர்தல் தந்திரத்தை காட்டாமல் மக்களை அரவணைத்து அபிவிருத்தி மேற்கொள்வீர்களா?
என்பதை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.
இந்த ஒலுவிலில் உங்கள் பெயர் இனியும் நிலைத்திருப்பதா?இல்லையா? என்பதற்கு கிடைத்திருக்கும் ஒரு சந்தர்ப்பம் இதுதான். இது கடைசியாகவும் இருக்கலாம் ஆரம்பமாகவும் அமையலாம்.
அது நீங்கள் எடுக்கும் மக்களை அரவணைக்கும் முயற்சியில்தான் உள்ளது மக்கள் என்று சொன்னது உங்களை நம்பி வாக்குகளை அள்ளி அள்ளி போட்ட மக்கள் அதை மறந்துவிடாதீர்கள் இது ஒன்றும் எச்சரிகை இல்லை மக்களின் உண்மையான ஆதங்கம் காத்துகொண்டிருக்கிறேம் இன்ஸா அல்லாஹ்.
உங்களை குறை சொல்ல வேண்டும் என்பதல்ல எனது நோக்கம். கட்சிக்காக பாடுபட்ட மக்களுக்காக ஊருக்காக உரிய முறைப்படி அபிவிருத்திகள் சென்றடைய வேண்டும் என்பதுதான் இதன் விளக்கம்.
பதவி,தலைமை,பட்டம் என்பன அமானிதம் நிச்சயம் இறைவனிடம் பதில் செல்ல வேண்டிவரும் மக்களை ஏமாற்றலாம் அல்லாவை ஏமாற்றலாமா ??

ஒலுவில் ஜெலில்






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top