ரஷ்ய தூதர்
சுட்டுக்கொலை: கொலையாளியின்
பெற்றோர் உள்ளிட்ட
6 பேரிடம் விசாரணை
துருக்கியில்
ரஷ்ய தூதரை சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து, கொலையாளியின் பெற்றோர் உள்ளிட்ட 6 பேரை பொலிஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துருக்கி
தலைநகர் அங்காராவில்
நேற்று மர்ம
நபர் நடத்திய
துப்பாக்கி சூட்டில் அந்நாட்டிற்கான ரஷ்ய தூதர்
அண்ட்ரிவ் கொலோவ்
கொல்லப்பட்டார்.
பின்னர்
பொலிஸார் நடத்திய
பதில் தாக்குதலில்
அந்த மர்ம
நபரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவர் துருக்கி
பொலிஸ்காரர்
ஆல்டின்டாஸ் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த
சம்பவத்தைத் தொடர்ந்து அதே பகுதியில் உள்ள
அமெரிக்க தூதரகத்தின்
வெளியே மர்ம
நபர் ஒருவர்
துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார். அந்த
நபர் கைது
செய்யப்பட்டுள்ள நிலையில், பிற பகுதிகளில் உள்ள
அமெரிக்க தூதரகங்கள்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டன.
இந்நிலையில்,
தூதர் சுட்டுக்கொல்லப்பட்டது
குறித்து விசாரணை
நடத்தி பதில்
அளிக்க வேண்டும்
என ரஷ்யா
வலியுறுத்தியது. மேலும், இதுபற்றி விசாரிப்பதற்காக ஒரு
குழுவும் துருக்கிக்கு
விரைந்தது.
இந்நிலையில்,
ரஷ்ய தூதர்
சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக
கொலையாளி அல்டின்டாசின்
தாய், தந்தை,
சகோதரி, மாமா
உள்ளிட்ட 6 பேரை பொலிஸார் பிடித்து
தீவிர விசாரணை
நடத்தி வருகின்றனர்.
ஆட்சியை
கவிழ்க்க முயன்றதாக
குற்றம்சாட்டப்பட்டுள்ள பெதுல்லா குலெனின்
குழுவினருக்கும் இந்த தாக்குதல் நடத்திய நபருக்கும்
தொடர்பு இருக்கலாம்
என அங்காரா
நகர மேயர்
தெரிவித்துள்ளார்.
A Turkish website claimed to show sections of Altintas's
personnel police file
|
Six people have been arrested over the shooting including
Altıntaş sister (pictured), father, mother, uncle and flatmate
|
Six people have been arrested over the shooting including
Altıntaş sister (pictured), father, mother, uncle and flatmate
|
Altintas was shot dead by Turkish security forces who
responded to the assassination
|
0 comments:
Post a Comment