‘ஜெயலலிதா மகள்’ என வைரல் ஆகும் படத்தில்
இருப்பவர் உண்மையில் யார்?
விளக்கம் அளித்த பாடகி சின்மயி
மேலே
இருக்கும் படம்தான்
கடந்த சில
நாட்களாக வாட்ஸப்பில்
ஷேர் ஆகிக்கொண்டிருக்கிறது.
இவர்தான் மறைந்த
முதல்வர் ஜெயலலிதாவின்
உண்மையான மகள்
என்ற தகவலுடன்
ஒரு மொபைல்
விடாமல் சுற்றிக்கொண்டிருக்கிறது
இந்தப் புகைப்படம்.
"இந்த உலகத்தில் ஒரே மாதிரி
7 பேர் இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கோம் இல்லையா? அப்படித்தான் இவரும். இந்தப் படத்தில் உள்ளவங்களுக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும்
சம்பந்தமே கிடையாது.
இவர் தமிழ்நாட்டிலேயே இல்லை.
பல வருடங்களாக வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.. படத்தில் அந்தப்
பெண்கூட இருக்கிறவர்
அவருடைய கணவர் ராமநாதன்.
யாரோ
பண்ணின குசும்பு
வேலை இது.
அசப்புல அவங்களை
மாதிரி இருக்காங்கன்னு
இப்படியொரு புரளியைக் கிளப்பி விட்ருக்காங்க. அந்தப்
பெண்ணோட பெயரையோ,
அவங்க இருக்கிற
இடத்தையோகூட நான் சொல்ல விரும்பலை. அப்படிச்
சொன்னா அவங்களோட
நிம்மதி கெட்டுப்
போயிடும்.
குழந்தைங்களோட
சந்தோஷமா, அமைதியா
வாழ்ந்திட்டிருக்காங்க. அப்படியே இருக்கட்டும்.
எங்கயோ, ஏதோ
ஒரு கல்யாணத்துல
எடுத்த படம்
இப்படித் தப்பா
பரவி இவ்வளவு
தூரம் வந்திருக்கு.
முதல் முறை
இந்தப் படம்
சோஷியல் நெட்வொர்க்ல
பரவினதைக் கேள்விப்பட்டே
அவங்க குடும்பம்
அதிர்ச்சியாயிட்டாங்க. இப்ப மறுபடி
யாரோ அதைக்
கிளறிவிட்டிருக்காங்க. ரொம்பப் வெறுத்துப்
போய், இந்தச்
செய்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வச்சாகணும்னுதான் அவங்க சம்மதத்தோட இந்தப் படத்தை
ஷேர் பண்ணினேன். இவ்வாறு தெரிவித்துள்ளார் பாடகி சின்மயி
0 comments:
Post a Comment