ரஷ்ய தூதர் படுகொலையை படம்பிடித்த
தில் படப்பிடிப்பாளர்
வரலாற்றில் இடம்பெறப்போவது நிச்சயம்!
உலகம் முழுவதும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ள ரஷிய தூதர் படுகொலை சம்பவம், ஒரு தைரியமான புகைப்படக்காரரை அடையாளம் காட்டியுள்ளது.
துருக்கியில் நேற்று மேடையில் பேசிக் கொண்டிருந்த ரஷ்ய தூதரை, மர்ம நபர் சுட்டுக் கொன்றுவிட்டு, கையில் துப்பாக்கியுடன், ’Don't forget Aleppo!’ என உரக்க கோஷமிட்டார்.
இந்த காட்சியை கண்டு அங்கிருந்தவர்கள் அச்சத்தில் உறைந்து போய் நின்ற சமயத்தில், சற்றும் கலக்கமடையாமல் அந்த காட்சியை தன் கமராவில் பதிவு செய்துள்ளார் அசோசியேடட் பிரஸ் புகைப்படக்காரர் ’பர்கன் ஒஸ்பிலிசி’.
இந்த புகைப்படமும், கமராவில் பதிவு செய்தவரின் தைரியமும் வரலாற்றில் இடம்பெறப்போவது நிச்சயம்!
A 22-year-old policeman opened fire in a gallery in
Ankara killing an ambassador
|
0 comments:
Post a Comment