எமது நாட்டு தேசியக் கொடி, தேசியக் கீதம்
சிறுபான்மை இன மக்களுக்காக
மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் எதனைத் தெரிவித்தார்
இலங்கையில்
உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் புதிய
அரசியல் அமைப்பில் தேசியக் கொடி, தேசியக் கீதம் அதில், தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் பேசப்படுகின்றது.
இலங்கையில்
புதிய அரசியல்
அமைப்பு உருவாக்கப்பட்டுக்
கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் தேசியக் கொடி, தேசியக்
கீதம் பற்றி முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும்
எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் 17 வருடங்களுக்கு முன் என்ன கருத்துடன் இருந்தார்.
எமது நாட்டின் தேசியக் கொடி மற்றும் தேசியக்கீதம் பற்றி முஸ்லிம் காங்கிரஸின்
ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் கடந்த 17 வருடங்களுக்கு முன் அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற
அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலுள்ள ஊடகவியலாளர்களுக்கான “தேசிய
அபிவிருத்தியும் செய்தித் தொடர்பும்“ என்னும் பயிற்சிக் கருத்தரங்கில் உரை
நிகழ்த்துகையில் பின்வருமாறு கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
எமது நாட்டிலுள்ள தேசியக் கொடியைக் கொண்டு தேசியக் கொடியை ஏற்படுத்தும்
கமிட்டியில் தமிழர்களும் முஸ்லிம்களும் இருந்தார்கள். ஆனால், துர் அதிஸ்டவசமாக
மூவின மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தேசியக் கொடியை இந்த நாட்டினால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதான்
சமுதாயங்களை பிரிந்து செல்வதற்கான அத்திபாரம் இடப்பட்டது.
எமது நாட்டின் தேசியக் கொடியின் சிவப்பு வட்டத்திற்கு உள்ளே இருக்கின்ற
சிங்கம், நான்கு அரச
மர இலைகள், அந்த சிங்கத்தின் கையில் இருக்கின்ற வாள் இது பரம்பரை பரம்பரையாக இலங்கை
சிங்கள மக்களின் கொடியாகக் காணப்பட்டதாகும். இதுதான் சிங்கள மன்னர்களின் கொடியுமாகும்.
எமது அண்டை நாடான இந்தியாவின் தேசியக் கொடியில் நிறங்கள் மாத்திரம்
சமாந்தரமாக உள்ளன. அதற்கு நடுவே தர்மசக்கரம் இருக்கிறது. இந்த தர்மசக்கரத்தை சகல மதத்தவர்களும்
ஏற்றுக்கொள்வர் யாராலும் நிராகரித்துவிட முடியாது..
இதுபோன்றுதான் இலங்கை தேசியக் கொடியில் சகல மதத்தவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறு
சிவனொளிபாத மலையையாவது கொண்டு வாருங்கள் என்று கூறிய யோசனைகள் எல்லாம் நிராகரிக்கப்பட்டு
சிங்கக் கொடிதான் தேசியக் கொடியாக இருக்க வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.
அப்படியென்றால் சிறுபான்மை இன மக்களின் இடம் எங்கே? என்ற கேள்வியை எழுப்பிய போது சிறுபானமை
மக்களை நாங்கள் நிறங்களின் மூலம் அடையாளப்படுத்துவோம். அதாவது தமிழர்களை மஞ்சள் நிறத்தின்
மூலமும் முஸ்லிம்களை பச்சை நிறத்தின் மூலமும் அடையாளம் காட்டுவோம் என்று கூறப்பட்டது.
அப்படியானால் இரண்டு இனங்களையும் அடையாளப்படுத்தும் இரண்டு நிறங்களையும்
சிங்கக் கொடிக்குள் போடுங்கள் என்று சிறுபான்மை சகோதரர்கள் கேட்டார்கள்.
அந்த இரண்டு நிறங்களையும் சிங்கக் கொடிக்குள் போடுவதற்குக்கூட
அப்போதிருந்த அரசியல் தலைமைத்துவம் விரும்பவில்லை. இரண்டு நிறங்களும் சிங்கக் கொடிக்கு
வெளியே போடப்பட்டன.
அப்போது தமிழ் தலைவர்கள் இந்தச் சிங்கத்தின் கையிலே வாளை எதற்காக
கொடுத்துள்ளீர்கள். இந்த வாளை இந்தச் சிங்கம் வைத்துக் கொண்டு யாரை எச்சரிக்கிறது?
என்று கேட்டார்கள்.
சிங்கத்தின் கையிலுள்ள வாளுக்கு எதிராக சமூகங்களுக்கு அடையாளமாகக்
காட்டப்பட்டுள்ள இரண்டு நிறங்களைப் போடுகின்றபோது இந்த நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை
மக்களை எமது நாட்டு தேசியக் கொடி எச்சரித்துக் கொண்டிருக்கிறதா என்ற கேள்வி அப்போது
எழுப்பப்பட்டது.
இந்தக் கேள்விக்கு இதுவரையும் தெளிவான விடை இல்லாத ஒரு சூழ்நிலையில்தான்
எங்களின் பங்களிப்பு என்ன? எப்படி? இருக்கப் போகின்றது என்ற கேள்வி எழுப்ப வேண்டி இருக்கின்றது.
தேசியக் கொடியில் இருக்கின்ற சிவப்பு, மஞ்சள்,பச்சை நிறங்கள்
மூன்றும் சமாந்திரக் கோடுகளாகும். சமாந்திரக் கோடுகள் எப்போதும் சந்திப்பதில்லை, சந்திக்க
முடியாது.
எமது நாட்டிலுள்ள மூன்று சமூகங்களும் மூன்று சமாந்திரக் கோடுகளாக
ஒட்டிக்கொண்டிருப்பதன் காரணமாக சந்திக்க முடியவில்லை.
எமது நாட்டு தேசியக் கீதம்
ஒன்று சேர்ந்து பாடக்கூடிய தேசியக்கீதமல்ல
தேசியக் கீதத்தைப் பொறுத்தவரையில் நாம்
எல்லோரும் ஒன்று சேர்ந்து பாடக் கூடிய தேசியக்கீதம் எமது நாட்டில் இல்லை.
சிங்களத்திலும் தமிழிலும் ஒன்று சேர்ந்து பாடமுடியாது.
ஆனால்,சமஸ்கிருத மொழியில்தான் தேசியக்
கீதத்தைப் பாடக்கூடிய துர்ப்பாக்கிய நிலையில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். “நமோ, நமோ, நமோ மாதா“ இதுதான் தமிழர்களையும் முஸ்லிம்களையும்
இனைக்கின்ற எமது நாட்டின் தேசியக்கீதத்திலுள்ள ஒரே ஒரு வசனம்.
நாங்கள் ஒரே நாடு
ஒரே மக்கள் என்று சொல்கின்றோம். எங்களுக்கு என்று பொதுவான முறையில் சேர்ந்து
பாடக்கூடிய தேசியக் கீதம் இல்லை.
இப்படியாக இருந்து
கொண்டு எவ்வாறு நாம் தேசிய ஒருமைப்பாட்டைப் பற்றி சிந்திக்க முடியும் என்பது
இன்னும் கேள்விக் குறியாகத்தான் இருந்து கொண்டிருக்கின்றது.
0 comments:
Post a Comment