ஜெயலலிதாவுக்கு பிடித்த பெருமாள் சாமி

ஜெயலலிதாவின் கோட்டையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் எந்த அளவுக்கு முக்கியமோ அதே போன்று அவரை பாதுகாக்கும் பாதுகாவலர்கள் அவருக்கு மிகவும் முக்கியம்.
எவ்வித தொந்தரவுகளும் இன்றி தன்னை பாதுகாப்பாக அழைத்து செல்லும் பாதுகாவலர்கள் மீது ஜெயலலிதா தனிப்பிரியம் வைத்திருப்பார். இந்த பாதுகாவலர்களின் மிக முக்கியமானவர் பெருமாள் சாமி.
முதல்வர் ஜெயலலிதா 1991 முதல் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வருகிறார் , இடையில் சில வருடங்கள் இல்லாவிட்டாலும் முதல்வர் ஜெயலலிதாவின் சிறப்பு பாதுகாப்பு பிரிவில் (கோர்செல்) ஏடிஎஸ்பியாக இருப்பவர் பெருமாள் சாமி.
ஜெயலலிதா பாதுகாப்பு வாகனமான கான்வாயில் முக்கிய தலைமை அதிகாரி இவர்.ஜெயலலிதா ஒரு இடத்துக்கு செல்கிறார் என்றால் முதலில் பெருமாள் சாமி தான் அந்த இடத்தை சென்று பார்வையிட்டு சரி என்று சொன்ன பிறகே ஜெயலலிதா வருவார். ஜெயலலிதாவால் அப்பு என்று செல்லமாக அழைக்கப்பட்டவர்.
முதல்வர் ஒரு இடத்துக்கு செல்கிறார் என்றால் பொதுமக்கள் , தொண்டர்கள் இடையே இறங்கி வேகமாக முதல்வர் காருடன் வேகமாக ஓடிவருவார்.
விஐபிக்கள் , தொண்டர்கள் யாராக இருந்தாலும் பெருமாள் சாமி முதல்வர் கண்ணசைவை நோக்கியே செயலாற்றுவார்.
முதல்வரின் பாதுகாவலராக பல ஆண்டுகள் அன்புக்குரியவராக விளங்கிய பெருமாள் சாமி முதல்வர் முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் குட்டி யானையால் தாக்கப்பட்டு கீழே விழுந்தபோது தாங்கி பிடித்தார். இப்படி, விசுவாசியாக இருந்த இவருக்கு பேரதிர்ச்சியாய் வந்து விழுந்தது அம்மாவின் இறப்பு செய்தி.

முதல்வர் உயிரோடு இருந்த போது அவர் வெளியே கிளம்புபோது பரபரப்பு தோன்றும் அதே போன்று உயிரற்ற அவரது உடலை உருக்கத்துடன் தங்கள் முதல்வர் வீடு நோக்கி செல்லும் பாதுகாப்பு ஏற்பாட்டை செய்தனர் அவரது பாதுகாவலர்கள்.
மறுநாள் முதல்வர் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போதும், அவரது இறுதி ஊர்வலத்திலும் , அவரது சமாதி அமைக்கப்படும் இடத்தில் அவர் சமாதியில் அடக்கம் செய்யப்படும் அனைத்து ஏற்பட்டையும் பெருமாள் சாமி ஏற்பாடு செய்தார்.
அவரது உடல் கடைசியாக சந்தனபெட்டியில் வைக்கப்பட்டு அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு சவப்பெட்டியை மூடும் முன்னர் எங்கிருந்தோ ஓடி வந்தார் பெருமாள் சாமி கனத்த இதயத்துடன் முதல்வரின் முகத்தை ஆழ்ந்து உற்று நோக்கினார்.

.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top