ஜெயலலிதா
உடலுக்கு மலர் வளையம் வைத்து
இந்திய பிரதமர் மோடி அஞ்சலி
தமிழ்நாடு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினா
சென்னை
அப்பல்லோ ஆஸ்பத்திரியில்
சிகிச்சை பெற்றுவந்த
முன்னாள் முதல்
அமைச்சர் ஜெயலலிதாவின்
உயிர் நேற்று
பின்னிரவில் பிரிந்தது. அவரது உடலை சென்னை
மெரினா கடற்கரையில்
உள்ள எம்.ஜி.ஆர்.
நினைவிட வளாகத்தில்
அடக்கம் செய்ய
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ராஜாஜி
மண்டபத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின்
உடல் இன்று
மாலை 4.30 மணியளவில்
நல்லடக்கம் செய்யப்படும் என மாநில அரசின்
சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில்
இருந்து சென்னை
வந்த பிரதமர்
நரேந்திர மோடி
இன்று பிற்பகல்
1.30 மணியளவில் ஜெயலலிதாவின் உடலுக்கு மலர் வளையம்
வைத்து அஞ்சலி
செலுத்தினார். ஜெயலலிதாவின் உடல் அருகே சோகமாக
நின்றிருந்த முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்,
சசிகலா ஆகியோருக்கு
பிரதமர் ஆறுதல்
கூறினார்.
பிரதமருடன்
மத்திய மந்திரி
பொன். ராதா
கிருஷ்ணன், தமிழ்நாடு கவர்னர் வித்யாசாகர் ராவ்,
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் தமிழிசை
சவுந்தரராஜன், மேல்சபை எம்.பி. இல.கணேசன் ஆகியோர்
ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
0 comments:
Post a Comment