ஜெயலலிதாவுக்கு இறப்பு சான்றிதழ்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்,75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா, நேற்று இரவு, 11:30 மணிக்கு காலமானார். அவரது மறைவுக்கு பின், சென்னை மாநகராட்சி நேற்று இறப்பு சான்றிதழை வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி இணையதளத்தில் ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அவரது குடும்ப விவரங்கள் மற்றும் முகவரி, இறப்பு நேரம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. அந்த சான்றிதழில் சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர் (பொறுப்பு) டாக்டர் செந்தில்நாதன் கையெழுத்திட்டுள்ளார். இந்த சான்றிதழ் 6-ம் திகதி வழங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மண்டலம் 09; கோட்டம் 111
பெயர்: ஜெ.ஜெயலலிதா
பாலினம்: பெண்
இறப்பு நாள்: 2016 டிச., 5 இரவு 11:30
வயது: 68
இறப்பு நிகழ்ந்த இடம்: சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை
தாய் பெயர்: ஜெ.சந்தியா
தந்தை பெயர்: ஆர்.ஜெயராம்
இறக்கும் போது இருப்பிட முகவரி: எண்.81, வேதா இல்லம், போயஸ் கார்டன்,சென்னை - 600086
சான்றிதழ் வழங்கப்பட்ட நாள்: 2016 டிச., 6
0 comments:
Post a Comment