சம்மாந்துறையில் வீதி அபிவிருத்தி
பல
சகாப்தங்களாக பிரதேச அரசியல் வாதிகளினால் புறக்கணிக்கப்பட்ட
சம்மாந்துறை அலவக்கரை வீதியை இரண்டு கோடி
ரூபா செலவில்
காபட் வீதியாக
அமைப்பதற்கான வேலைத்திட்டத்தினை ஐக்கிய தேசிய கட்சியின்
சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் முஹம்மட்
ஏ. ஹசன்
அலி அவர்களினால் கடந்த 18 (2016/12/18) ஆம் திகதி பொது மக்கள்
முன்னிலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பெருந்தெருக்கள்
மற்றும் உயர்கல்வி
அமைச்சர் கௌரவ
லக்ஷ்மன் கிரியல்ல
அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட
நிதியிலிருந்து 20 மில்லியன் இவ்வேலைத்திட்டத்திற்கு
ஒதுக்கப்ட்டுள்ளது.
இந்
நிகழ்வில் அமைப்பாளர்
ஹசன் அலி
அவர்கள் உரையாற்றுகையில்
சம்மாந்துறை அலவக்கரை பிரதேசமானது கடந்த கால
அரசியல் வாதிகளினால்
புறக்கணிக்கப்பட்ட பிரதேசமாக இருந்தது.
இந் நல்லாட்சி
அரசாங்கத்தில் எந்த ஒரு பிரதேசமோ மக்களோ
புறக்கணிக்கப்படமாட்டார்கள். கட்சி பேதமின்றி
எமது சேவைகள்
நடைபெறும் எமது
பிரதேசம் கல்வி
பெருளாதாரம் சுகாதாரம் வீதி அபிருத்தி போன்ற
அபிவிருத்திகளில் பின்தங்கி காணப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க
அவர்களின் தலைமையிலான
நல்லாட்சி அரசாங்கத்தில்
கல்வி பொருளாதாரம்
சுகாதாரம் வீதி
அபிவிருத்தி ஆகியவற்றின் குறைபாடுகள் அனைத்தும் நிறைவு
செய்யப்படும். அதன் முதற்கட்டமாக அலவக்கரை வீதி
காபட் இடப்பட்டு
புணர்நிர்மாணம் செய்யும் வேலைத்திட்டத்தினை
ஆரம்பித்து வைத்திருக்கின்றேன். அதே போன்று சம்மாந்துறையில்
உள்ள அல்
மர்ஜான் முஸ்லிம்
மகளிர் கல்லூரியினை
தேசிய பாடசாலையாக
தரமுயர்த்துவதற்கான பணியினை வெற்றிகாரமாக
மேற்கொண்டு வருகின்றேன். சம்மாந்துறை பிரதேச சபையினை
நகர சபையாக
மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றேன். பெருளாதாரத்தில்
பின்தங்கியுள்ளவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான
வேலைத் திட்டங்களையும்
முன்னெடுத்து வருகின்றேன் என்று கூறினார்.
இந்
நிகழ்வின் போது
வீதி அபிருத்தி
அதிகார சபையின்
மாகணப் பணிப்பாளர்
அல் ஹஜ்
ஏ.எல்.எம். நிஸார்
பொறியியாளர் அவர்களும் பிரதம பொறியியாளர் எம்.பீ. அலியார்
அவர்களும் பிரதேச
சபையின் செயளாலர்
ஏ. சலீம்
அவர்களும் அமைப்பாளரின்
இணைப்பாளர் எம்.எம்.எம். சமூன்
அவர்களும் அமைப்பாளரின்
பிரத்தியோக செயலாளர் எஸ்.ரீ.எம்.
சியாட் மற்றும்
கட்சியின் முக்கியஸ்தர்களும்
உலமாக்களும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனார்.
தகவல்: இர்ஷாட் ஏ. ஹமீட்
0 comments:
Post a Comment