உலகின் மிகப் பழமையான நீர் கண்டுபிடிப்பு!
உலகின் மிக பழமையான நீர் கனடாவில் உள்ள ஒர் சுரங்கத்தில் இருப்பதை கனடா டொராண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பழமையான நீர் மாதிரிகளில் இது தான் மிகப் பழமையான நீர் என்று விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன் 2013 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பழமையான நீர் மாதிரிகள் 2.4 கிலோமீட்டர் ஆழத்திலும், 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும் இருந்தது.
ஆனால் இப்போது சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும், 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த நீர் மாதிரியானது கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் ஆழத்தில் இருக்கிறது.
இந்த நீர் மாதிரியில் அதிக அளவில் சிறு உயிரினங்கள் வாழ்ந்ததற்கான ரசாயன சுவடுகள் கிடைத்துள்ளது. இந்த ரசாயன சுவடுகளை வைத்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டுவருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment