ஆர்.கே.நகரில் போட்டியிடக் காத்திருக்கும்
ஜெயலலிதாவின்.அண்ணன் மகள் தீபா?’

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து, அவர் தேர்வு செய்யப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. 'முதல்வர் இடத்தில் தீபாவை அமர வைப்பதற்காக, அவருடைய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வைக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது' என்கின்றனர் அவருடைய ஆதரவாளர்கள்.

.தி.மு.. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காலத்தில், அவரைச் சந்திப்பதற்காக இரண்டு முறை முயற்சி செய்தார் அவரது அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா. முதல்வரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. இதனால் கொந்தளித்தவர், மருத்துவமனை வாசலிலேயே ஆவேசமாகப் பேசினார். கடந்த 6-ம் திகதி முதல்வர் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தபோதும், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டார். இறுதிக் காரியங்களையும் தீபாவின் சகோதரர் தீபக்கும் சசிகலாவும் முன்னின்று செய்தனர். இதனால் உச்சக்கட்ட கொதிப்பில் இருக்கிறார் தீபா. அவரை முன்வைத்து சசிகலாவுக்கு எதிரான ஆட்டத்தையும் சிலர் தொடங்கியுள்ளனர்.

ஜெயலலிதாவைப் போலவே, அதிகாரத்தில் அமர வேண்டும் என விரும்புகிறார். ஜெயலலிதாவின் சொத்துக்களைகூட அவர் எதிர்பார்க்கவில்லை. 'நேரடியான வாரிசு' என மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி கட்சியை வழிநடத்த வேண்டும் என விரும்புகிறார். இதனை சசிகலா தரப்பினர் விரும்பவில்லை. அவருக்குத் தொடர்ச்சியான தொல்லைகளைக் கொடுத்து வருகின்றனர். இதையெல்லாம் எதிர்கொண்டு அவர் போராடி வருகிறார். ஆர்.கே.நகரில் இடைத் தேர்தல் அறிவிக்கும்போது, சுயேட்சையாக போட்டியிடும் முடிவில் இருக்கிறார். கட்சி நிர்வாகிகள் மத்தியிலும், தீபாவுக்கு நல்ல இமேஜ் இருக்கிறது. முதல்வரைப் போலவே கட்டுக்கோப்போடு வழிநடத்துவார் என நம்புகிறோம். அதற்கான காலச்சூழல்கள் அமைய வேண்டும் என்பதுதான் அவருடைய எதிர்பார்ப்பும் எனத் தெரிவிக்கின்றனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top