தமிழகத்தின் புதிய முதலமைச்சராக
.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார் 

பன்னீர் செல்வம் தலைமையில் புதிதாக பதவியேற்ற தமிழக அமைச்சரவை.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் 5-ஆம் திகதி நள்ளிரவு 11.30 மணிக்கு உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக .பன்னீர்செல்வம் பதவி ஏற்றுக்கொண்டார்.

அவருக்குத் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். .பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து, மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் .பன்னீர்செல்வம் தற்போது 3-வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பதவி ஏற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அங்கேயே தமிழக முதலமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதாவுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


முன்னதாக, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி, அதிமுக எம்.எல்..க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, .பன்னீர்செல்வம் சட்டமன்ற தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, அதிமுக எம்.எல்..க்கள் அனைவரும் தமிழக ஆளுநரைச் சந்தித்தனர். அதன்படி புதிய முதலமைச்சராக .பன்னீர்செல்வம் பதவி ஏற்றுக்கொண்டார். முதலமைச்சர் உட்பட 31 அமைச்சர்கள் அப்போது பதவியேற்றனர்


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top