பங்களாதேஷிற்கு பிரதமர் ஷேக் ஹஷீனா அம்மையாரின் அழைப்பின்பேரில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று (13) பிற்பகல் பங்களாதேஷ் தேசிய வீரர்களின் நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார். 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் தேசிய சுதந்திரப் போராட்டத்தின் வீரர்களை கௌரவிப்பதற்காக நிர்மாணிக்கப்பட்ட இந்த இராணுவ நினைவுத்தூபி,தலைநகர் டாக்காவிலிருந்து சுமார் 34 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சவார் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்களை பங்களாதேஷ் இராணுவ நலன்புரி விடயங்கள் தொடர்பான அமைச்சர்,வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் ஆகியோர் வரவேற்றனர். தனது விஜயத்தை நினைவுக்கூறும் வகையில் அங்கு மரக்கன்று ஒன்றினை நாட்டிய ஜனாதிபதி அவர்கள், விசேட பிரதிநிதிகள் நினைவுக்குறிப்பேட்டிலும் கையெழுத்திட்டார். அமைச்சர் ரவி கருணாநாயக்க,அசாத் சாலி உள்ளிட்ட தூதுக்குழுவினரும் இவ்விஜயத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top