முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகளை விட

வடக்கு. முதலமைச்சரின் வெளி நடப்பால் வெந்து போன

முஸ்லிம்களின் குரலாக வந்த அமைச்சர் ஹக்கீம்




பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் மக்களுக்காக பேசப்படுகின்ற போது வடக்கு. முதலமைச்சர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வது மூலம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் மக்களை மதிக்கவில்லை, அந்த மக்களின் நியாமான கோரிக்கையை ஏற்க மறுக்கிறார். கூட்டத்தின் ஒழுங்கு முறைகளை மதியாது அவ்வாறு செயல்பட்டிருக்கிறார் என்றே எம்மால் கருதப்படுகின்ற நிலையில் முஸ்லிம்களின் குரல் எனத் தேர்தல் காலங்களில் கூறிக் கொன்டு முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் மாத்திரம் அவரின் வெளிநடப்பால் வெந்து போய் இருக்கின்றார்..
இலங்கை வாழ் முஸ்லிம்களின் குரல் எனக் கூறிக் கொண்டிருக்கும் மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு பாதிக்கப்பட்டிருக்கும் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் பிரச்சினையை தேவையில்லாத பிரச்சினை எனக் கூறியுள்ளார். அவர்களின் பிரச்சினை பெரிதாக தென்படவில்லை. முதலமைச்சர் வெளிநடப்புச் செய்ததுதான் முஸ்லிம் குரலுக்கு? பொறுக்க முடியவில்லை அதனால் .வுவுனியாவில் பொங்கி எழுந்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர்கள் இது குறித்து எதுவும் கூறாத நிலையில் மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் இவரின் வெளிநடப்பால் பெருத்த கவலை அடைந்துள்ளதை அவரின் வவுனியா பேச்சு எடுத்துக்காட்டுகின்றது..
முஸ்லிம்களின் பிரச்சினகளை வடக்கு முதலமைச்சருடன்  பேசி பல தீர்வுகளைப் பெற்றுகொடுத்தவர் போல் அவரின் வெளிநடப்பில் முஸ்லிம்களின் குரல் எனக்கூறிக் கொள்ளும்  மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் நியாயம் பேசியிருக்கின்றார்..
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் தனது ஏமாற்று அரசியலுக்கு சவாலாக இருக்கும் றிஷாத் பதியுதீனை தனது வவுனியாப் பேச்சில் குறை காண்கின்றார்.
“முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகளை தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்து கொண்டு இருக்காமல், அவர்களை நிம்மதியாக வாழ்வதற்கு வழிவிடுங்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் கொட்டியாகும்பம் பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களுக்கு 7 வருடங்களுக்கு முன்னரே காணிக் கச்சேரி இடம்பெற்ற போதும், இன்னும் அவை அவர்களுக்கு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது.
அதே போன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்ந்து, வெளியேறி மீண்டும் இங்கு வந்துள்ள முஸ்லிம் மக்கள் காணிகளின்றி அவதிப்படுகின்றனர்.
இந்த மக்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக இவ்வாறான ஓர் அநியாயம் ஏன் இழைக்கப்படுகின்றதுஇந்த மக்கள் இங்கே குடியேறுவதற்கு நீங்கள் விரும்புகிறீர்களாஅல்லது அவர்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்களா? என கைத்தொழில் வர்த்தக அமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர்களின் ஒருவருமான ரிஷாட் பதியுதீன் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் சார்பாக முல்லைத்தீவில் கடந்த 10 ஆம் திகதி(10.07.2017) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தார் அல்லவா?
இதனையே மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் வவுனியா மாவட்டத்தில் விமர்சித்துப் பேசி இருக்கிறார். உண்மையில் இவர் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் மக்கள் மீது அக்கறையில்லாமல் அசிங்கமான அரசியல் செய்து கொண்டிருக்கிறார் என்பதையே முஸ்லிம் சமூகத்திற்கு வெளிப்படுத்துகின்றது.
.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர்கள் இது குறித்து எதுவும் கூறாத நிலையில் முஸ்லிகளின் குரல் என தேர்தல் காலங்களில் மட்டும் கூறிக்கொள்ளும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாதிக்கப்பட்டிருக்கும் முல்லைத்தீவு முஸ்லிம் மக்கள் எக்கேடு கெட்டுப்போனாலும் பராவாயில்லை அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் தனது ஏமாற்று அரசியலுக்கு சவாலாக இருக்கும் றிஷாத் பதியுதீனை தட்டிப் பணிக்கவேண்டும் என நினைக்கின்றார்.
உண்மையில் வடக்கு முதலமைச்சர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வது என்பது அநாகரிகமான செயல்பாடாகவே நாம் கருதுகின்றோம். முதலமைச்சர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வது மூலம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் மக்களை மதிக்கவில்லை, அந்த மக்களின் நியாமான கோரிக்கையை ஏற்க மறுக்கிறார். கூட்டத்தின் ஒழுங்கு முறைகளை மதியாது அவ்வாறு செயல்பட்டிருக்கிறார் என்றே எம்மால் கருத முடியும்.
ஆனால், மு.கா.தலைமைக்கோ இது எல்லாம் முக்கியம் இல்லாமல் அவர் மற்றவர்களிடம் நல்லவராகப் பார்க்கின்றார். வடக்கிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஒரு வீடுதானும் ஏன் ஒரு கக்கூஸ்தானும் கட்டிக்கொடுப்பதற்ற்கு வக்கில்லாத அமைச்சர் ஹக்கீம் வடக்கிலுள்ள தமிழ் - முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்துவதில் வரிந்து கட்டிக்கொண்டு செயற்படுகின்ற வேலைதான் இது என்கிறார்.
அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களால் வடக்கில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஆயிரக்கணக்கில் வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கும் நிலையில் மக்களுக்கு வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத கேவலமான, அசிங்கமான ஏமாற்றுகின்ற ஒரு அரசியல் முஸ்லிம் மக்கள் மத்தியில் ரவூப் ஹக்கீம் மூலம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ள நிலையில் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை கதைக்காமல் தற்போது எதை எல்லாமோ உளறத் தொடங்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கான நியாயங்களை பேசவேண்டிய இடங்களில் பேச வேண்டும். ஆனால், முஸ்லிம்களின் குரல் எனக் கூறிக்கொண்டு மக்களின் வாக்குகளைப் பெற்ற இவர் பக்குவம், நிதானம், சாணக்கியம் என்ற வார்த்தைகளைப் பேசி முஸ்லிம் மக்களுக்கான தீர்வுகள் எதையும் பெற்றுக் கொடுக்காமல் காலத்தைக் கடத்தி ஏமாற்றுகின்றார்.
அக்கரைப்பற்றில் காட்டுத்தர்பார் அரசியல் நடத்தியவர்களை தன்னோடு வைத்துக்கொண்டு மற்றவர்கள் மீது காட்டுத்தர்பார் என விரலை நீட்டுகின்றார். அவர் ஒரு விரலை நீட்டும் போது நான்கு விரல்கள் அவரை நோக்கி சுட்டிக்காட்டுகின்றது என்பதை அவர் மறக்கக் கூடாது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகளை தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்து கொண்டு இருக்காமல், அவர்களை நிம்மதியாக வாழ்வதற்கு வழிவிடுங்கள். என வடக்கு முதலமைச்சரிடம் அழுத்தி கேட்க வேண்டிய கடமை முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்ற மு.கா.தலைவரினதும் பொறுப்பாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
அல் ஹாபிழ் அஸாம் அப்துல் அஸீஸ்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top