ஷிரந்தி ராஜபக்ஸவுக்காக விசாரணை பிரிவுக்குள்
பலவந்தமாக நுழைய முயற்சித்த 40 சட்டத்தரணிகள்
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸவின்
மனைவி ஷிரந்தி
ராஜபக்ஸ நேற்றைய தினம்
குற்ற விசாரணை
திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார் அல்லவா?
விசாரணை
இடம்பெறும் இடத்திற்கு ஷிரந்தி ராஜபக்ஸ மாத்திரமே அழைக்கப்பட்ட போதும், 40 சட்டத்தரணிகள்
பலவந்தமாக விசாரணை
திணைக்களத்திற்குள் நுழைய முயற்சித்துள்ளதாக
ஊடகம் ஒன்று
தகவல் வெளியிட்டுள்ளது.
அவர்களை
கட்டுப்படுத்துவதற்கு விசாரணை அதிகாரிகள்
பலர் கடும்
முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக விசாரணை திணைக்கள தகவல்
வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஊடகம் தகவல்
வெளியிட்டுள்ளது.
குற்ற
விசாரணை திணைக்களம்
பலத்த பாதுகாப்பினை
கொண்ட இடமாகும்.
அத்துடன் சோதனைக்கு
உட்பட்ட பின்னர்
சட்டத்திட்டங்களுக்கு அமையவே நபர்கள்
உள்ளே அனுமதிக்கப்படுவர்கள்.
எனினும்
சட்டத்தை நன்கு
அறிந்தவர்கள் இவ்வாறு செயற்பட்டமையானது வருத்தமளிக்கக் கூடிய
விடயம் என
விசாரணை அதிகாரிகள்
தெரிவித்ததாக ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
0 comments:
Post a Comment