ஊழியர் சேமலாப நிதியத்தின் தொகை தற்போது ஒரு இலட்சத்து 66 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
தொழில் வழங்குநரைப் போன்று ஊழியர்களும் நிதியத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என்று ஊழியர் சேமலாப நிதியத்தின் ஆணையாளர் டி.பி.கே.பி.வீரகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊழியர்கள் தமது தரப்பின் பங்களிப்பை உரிய முறையில் நிதியத்திற்கு அனுப்பப்படுகின்றதா என்பது பற்றி விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
ஊழியர்கள் தமது நிதியத்திலிருந்து 30 வீதமான தொகையை வீடமைப்பு கடனாக பெற்றுக்கொள்ள முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் இந்த வருடத்தில் இதுவரை 16 ஆயிரம் பேர் கடன் பெற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட ஆணையாளர் தொழில் வழங்குநர்கள் உரிய காலத்தில் தமது ஊழியர்களின் நிதியத் தொகையை அனுப்பி வைப்பார்களாயின் அநாவசியமாக அபராதம் செலுத்த வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment