குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம் காலமானார்.
கங்கை
அமரனின் 'கரகாட்டகாரன்'
படத்தில் கனகாவின்
தந்தையாக நடித்தவர்
சண்முகசுந்தரம். 77 வயதான இவர்
சிவாஜி முதல்
ஜி.வி.பிரகாஷ் குமார்
வரை பலருடனும்
நடித்துப் பெயர்
வாங்கியவர். 'சென்னை 28', 'கோவா', 'கடவுள் இருக்கான்
குமாரு' உள்ளிட்ட
படங்களிலும் நடித்திருக்கிறார்.
உடல்நிலை
பாதிக்கப்பட்டிருந்த இவர் சாலிகிராமத்தில்
தனது வீட்டில்
வசித்து வந்தார்.
சிறிது நாள்களாகவே
உடல்நிலை மிகவும்
மோசமாக இருந்ததால்,
தனது வீட்டில்
காலமானார். ரத்தத்திலகம் படத்தின் மூலமாக அறிமுகமான
இவர் கடைசியாக
சிம்புவின் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில்
நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறுபதுகளிலேயே
நடிப்பைத் தொடங்கிய
சண்முகசுந்தரம், சிவாஜி கணேசன் நடித்த இரத்தத்
திலகம் மூலம்
அறிமுகமானவர். அதன் பிறகு, நத்தையில் முத்து,
இதயக்கனி, ஆதித்யன்,
குறத்தி மகன்,
மாப்பிள்ளை அழைப்பு, சக்திலீலை, லட்சுமி கல்யாணம்,
வாழையடி வாழை,
அவளுக்கு நிகர்
அவளே, கரகாட்டக்காரன்,
சென்னை 60028, தமிழ் படம் போன்ற நூற்றுக்கும்
மேற்பட்ட படங்களில்
நடித்துள்ளார்.
இயக்குநர்
திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின்
பெரும்பாலான படங்களில் சண்முகசுந்தரம் முக்கிய வேடத்தில்
தோன்றுவார்.
இவரது
தங்கைதான் பழம்பெரும்
நடிகை சந்திரகாந்தா.
எத்தனையோ படங்களில்
நடித்திருந்தாலும், கரகாட்டக்காரன் படம்தான்
சண்முகசுந்தரத்தை மிகப் பிரபலமாக்கியது. அவர் நடித்த
கடைசி படம்
அன்பானவன் அடங்காதவன்
அசராதவன்.
அண்ணாமலை,
செல்வி, அரசி,
வம்சம் உள்ளிட்ட
தொலைக்காட்சி தொடர்களிலும், சண்முகசுந்தரம்
நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment