'ஊடகக் கற்கைகள் மற்றும் பத்திரிகைக் கலை' டிப்ளோமா

பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

'ஊடகக் கற்கைகள் மற்றும் பத்திரிகைக் கலை' தொடர்பான டிப்ளோமா பாடநெறியைப் பூர்த்திசெய்துள்ள 5வது குழுவினருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
இலங்கைப் பத்திரிகைப் பேரவையினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு இன்று முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் விசேட அதிதியாகக் கலந்துகொண்ட இந்திய பத்திரிகைப் பேரவையின் தலைவர் திரு.சந்ரமௌலி குமார் 'வெகுசன ஊடகத்துறையின் ஒழுங்குமுறைகள் மற்றும் ஊடகச் சுதந்திரம்' எனும் தலைப்பில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் நிதி மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, பிரதியமைச்சர்களான லசந்த அழகியவன்ன, கருணாரத்ன பரனவிதான, பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ, பேராசிரியர் சுனந்த மஹேந்ர , சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் ஆரியரத்ன தொம்பகஹவத்த, காமினி சுமனசேக்கர உள்ளிட்ட அதிதிகளும், இலங்கைப் பத்திரிகைப் பேரவையின் தலைவர் கொக்கல வெள்ளால பந்துல உள்ளிட்ட அதன் உறுப்பினர்களும்; கலந்துகொண்டனர்





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top