கெஹெலிய ரம்புக்வெல்லவின் புதல்வர் ரமீத் ரம்புக்வெல்ல

அமெரிக்காவில் வசித்து வரும் இலங்கை பெண்ணை மணந்தார்

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல்லவின் புதல்வரான கிரிக்கெட் வீரர் ரமீத் ரம்புக்வெல்ல திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.
அமெரிக்காவில் வசித்து வரும் இலங்கை பெண்ணான நட்டாலி செனல் என்ற பெண்ணையே ரமித் திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
மணமகளின் தாய் அமெரிக்கா ராஜாங்க திணைக்களத்தின் உதவி ராஜாங்க செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
கம்பளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறி வசித்து வருகின்றனர்.

கொழும்பு காலிமுக திடல் ஹோட்டலில் நடந்த திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உட்பட அரசியல்வாதிகள், கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top