ரயிலுடன்
மோதி கார் விபத்து
உயிர்ச்சேதம்
இல்லை
யாழ்ப்பாணம் கந்தர்மடம் ரயில் கடவையில், ரயிலுடன் மோதி காரொன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
யாழ். இந்து மகளிர் கல்லூரிக்கு பின்புறமாகவுள்ள புகையிரதக்
கடவையில் குறித்த விபத்து இன்று பிற்பகல் வேளையில் நடந்துள்ளது.
குறித்த விபத்தில் காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கார் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போதே இந்த
விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த கார் வைத்தியர் ஒருவருக்கு சொந்தமானது என தகவல்கள்
தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment