சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்ற கோரிக்கை கணிந்துள்ள சூழ்நிலையில் அதனை தடுக்கும் பகீரத பிரயத்தனத்தில் முகா களம் இறங்கியுள்ளமை அம்பலத்துக்கு வந்துள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், பிரதித் தலைவர்- முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் ஆகியோரின் தொடர் உழைப்பால் இந்த பிரகடனம் வெளியாகுவதை பொறுத்துக்கொள்ள முடியாததே முகாவின் இந்த தடுக்கும் முயறசி என அறியவருகின்றது.
சாய்ந்தமருதுக்கான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் 10 தினங்களில் வெளியாகும் என அரச உயர் மட்டமும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் மக்கள் காங்கிரஸுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அம்பாறையில் மூன்று ஆசனங்களை கொண்டுள்ள முகாவுக்கு இது தொடர்பில் எந்தவொரு அறிவிப்பையும் அரசு அறிவிக்கவில்லை. தொடர்ச்சியாக- சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்ற கோரிக்கையை தடுக்கும் நோக்கில் முகா செயற்பட்டு வந்தமையும் அக்கட்சியின் அலட்சிய போக்குமே முகாவுக்கு அரசு அறிவிக்காததன் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில்தான் , வர்த்தமானி அறிவிப்பை தடுக்கும் பிரயத்தனத்தில் முகா இறங்கியுள்ளது.
கல்முனை பகுதியில் உள்ள சில முகா பிரமுகர்கள் என கூறப்படுவோரை கொழும்புக்கு அனுப்பி அறிவிப்பை குழப்பும் முயற்சியை முன்னெடுத்துள்ளனராம்.
அறிவிப்பை தடுப்பதற்காக பிரமுகர்கள் சிலரை சந்தித்து அழுத்தம் கொடுத்தல், உள்ளுராட்சி அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டம், சத்தியாகிரகம் செய்தல் என்பன கொழும்பு சென்றுள்ளோரின் பணியாம்.
கல்முனை தொகுதி முகா அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் கைகோர்த்து செயற்படுகின்றனராம்.
அமைச்சர் ரிஷாத், மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவர் ஜெமீல் ஆகியோரூடாக சாய்ந்தமருது பிரகடனம் இடம்பெற்றால் தமது அரசியல் வாழ்வு அஸ்தமனமாகிவிடும் என்ற ஐயப்பாடும், மறுபக்கம் மக்கள் காங்கிரஸுக்கு உயர்வு ஏற்பட்டு, ஜெமீலின் செல்வாக்கும் அதிகரித்துவிடும் என்ற பீதியுமே கல்முனை முகா அரசியல்வாதிகள் ஒன்றுபட்டுள்ளமைக்கான பின்புலம் என தெரிவிக்கப்படுகின்றது.
எது எப்பிடி இருந்தபோதிலும், சாய்ந்தமருது சமூகம் ஒன்றுபட்டு ஜெமீலின் கரங்களை பலப்படுத்தி - முகாவின் இந்த இரட்டை நாடகத்தை தடுக்க முயற்சிக்கவிடின் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றம் என்ற தாகம் இன்னும் பல ஆண்டுகள் தள்ளிப்போவதை யாராலும் தடுக்க முடியாது.
அடுத்துவரும் 10 தினங்களும் சாய்ந்தமருது மக்களுக்கு கிடைத்துள்ள அரிதான சந்தர்ப்ப தினங்களாகும் என்பதை மறந்து விடாதீர்கள்.
ஏ. எச். எம். பூமுதீன்
0 comments:
Post a Comment