மஹிந்தவின் மனைவிக்காக திரண்ட மக்கள்:

பொலிஸார் குவிப்பு

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையான ஷிரந்தி ராஜபக்ஸவிற்கு ஆதரவாக பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்னதாக திரண்ட மக்கள் பல கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எமக்கு மஹிந்த அரசு வேண்டும், எமது தாய் மீண்டும் திரும்பி வரவேண்டும், என தெரிவித்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக ஷிரந்தி ராஜபக்ஸ குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார். இவருடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் வருகை தந்திருந்தார்.
இதனால் குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மஹிந்தவின் இளைய மகன் ரோஹித்த ராஜபக்ஸவும் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top