அசாத் சாலி, ரவியின் விடயத்தில் மௌனிப்பதேன் என பானதுறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊடகங்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளாதாவது,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய காலத்தில் சிறியதொரு விடயம் கிடைத்துவிட்டாலும் அவற்றை நான்கு மைக்குகளின் முன்னாள் நின்று விமர்சிக்காவிட்டால் அஸாத் சாலிக்கு தூக்கம் வராது.
தற்போது இந்த ஆட்சியில் கள்வர்கள் கையும் களவுமாக மாட்டிக் கொண்டுள்ளார்கள்.அன்று முன்னாள் ஜனாதிபதியை ஊழல் வாதியென விமர்சித்த அசாத் சாலி, இவர்களை என்ன சொல்லப்போகிறார்?
இது தொடர்பில் அசாத் சாலி மௌனம் பேணி வருகிறார். இதுவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய காலத்தில் இடம்பெற்றிருந்தால் என்ன நடந்திருக்கும்?யார் யாரோ செய்த ஊழலை எல்லாம் மஹிந்த குடும்பம் செய்தாக போலியான குற்றச்சாட்டுக்களை பரப்பி இருப்பார்.
தற்போது மத்திய வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை எடுத்தால் இலங்கை நாடு பட்ட கடனை மறு நொடியில் அடைத்து விடலாம்.அந்தளவு பெரும் மோசடிகள் இவ்விடயத்தில் இடம்பெற்றுள்ளன.குறித்த விடயத்தில் ஊழல் வாதிகளை காப்பாற்ற இடம்பெற்ற முயற்சி,இதன் பின்னால் உள்ள சக்திகள் என்று இவ்விடயத்தை விமர்சிக்க ஆயிரம் விடயங்கள் உள்ளன.
ஜனாதிபதி மைத்திரியின் பின்னால் செல்லும் இவரால் அவைகள் பற்றியெல்லாம் எப்படித் தான் கதைக்க முடியும்.
இவ் விடயங்களை எடுத்து நோக்கினாலே அவர் முஸ்லிம் சமூகம் மீதும் இலங்கை நாட்டின் மீதும் கொண்டுள்ள அக்கறைக்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். இன்று அவரது மௌனம் அவரது அரசியல் இலாபம் கருதியும் தனது நண்பன் ரவி தொடர்பில் எதுவும் கூற முடியாது என்பதனாலாகும். இச் சந்தர்ப்பத்தில் அரசை பற்றிய சிறிய விமர்சனங்களும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மௌனம் பேணும் ஒருவர் சமூகம் பற்றி கதைக்க எந்த தகுதியும் அற்றவராகும்.
முன்னாள் ஜனாதிபதியை எல்லை மீறி விமர்சித்த அசாத் சாலிக்கு, அதற்கு விமோசனம் தேட ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.அதனை அவர் பயன்படுத்தி கொள்ள வேண்டும். என இபாஸ் நபுஹான் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment