நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே பியதாஸவின் வேண்டுகோளுக்கினங்க, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் நிதியொதுக்கீட்டில் கினிகத்தேனையில் அமைக்கப்பட்டுள்ள ஆடை உற்பத்தி பயிற்சி நிலைய அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
குறைந்த வருமானமுடைய குடும்பங்களின் வாழ்வாதரத்தை உயர்த்தும் பொருட்டு இவ் ஆடை உற்பத்தி பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் போது பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பியதாச, பிரதேச செயலாளர் சுமனசிரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment