தேசிய விருது பெற்ற பிரியாமணிக்குத் திருமணம்
தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணிக்கும் தொழிலதிபர் முஸ்தபா ராஜுக்கும் எதிர் வரும் 23-ஆம் திகதி பெங்களூரில் திருமணம் நடைபெறுகிறது.
’கண்களால்
கைது செய்’
என்ற படத்தின்
மூலம் இயக்குனர்
பாரதிராஜாவினால் தமிழ் படஉலகுக்கு கதாநாயகியாக அறிமுகம்
செய்யப்பட்டவர் பிரியாமணி. ‘அது ஒரு கனாக்காலம்,
தோட்டா, நினைத்தாலே
இனிக்கும், மலைக்கோட்டை’ உட்பட பல படங்களில்
நடித்திருக்கிறார். இயக்குனர்; அமீர்
இயக்கிய ‘பருத்தி
வீரன்’ படத்தில்
நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய
விருதை பிரியாமணி
பெற்றுக் கொண்டமை
குறிப்பிடத்தக்கது.
இந்த
நிலையில் பிரியாமணிக்கும்,
தொழில் அதிபர்
முஸ்தபா ராஜுக்கும்
இடையே நீண்டகாலமாக
காதல் இருந்து
வந்தது. 3 மாதங்களுக்கு
முன்பு இவர்களுக்கு
பெங்களூருவில் நிச்சயதார்த்தம் நடந்தது.
திருமணத்தை
இருவரும் பதிவு
செய்துகொள்கிறார்கள். மறுநாள் 24ஆம் திகதி மணமக்களுக்கு
வரவேற்பு அளிக்கும்
நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.
அதில் ஏராளமான
திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். திருமணம்
மற்றும் வரவேற்பு
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இரண்டு பேரின் பெற்றோர்களும்
கவனித்து வருகிறார்கள்.
0 comments:
Post a Comment