பொலிஸ்மா அதிபருடன்

புதிய பிரதமர் மஹிந்த அவசர சந்திப்பு



பிரதமர் ஹிந்த ராஜபக்ஸவை, பொலிஸ் மா அதிபர் பூஜித மற்றும் விசேட அதிரடிப்படையின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப் ஆகியோர், அரவது இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வீட்டில் தற்போது விசேட கூட்டம் ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோர் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top