அனைவரும் இலங்கையின்
அரசியலமைப்புக்கு அமைய செயற்பட வேண்டும்
அமெரிக்கா


இலங்கையில் அனைத்து தரப்புகளும் வன்முறைகளில் இருந்து விலகி, சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், அரசியலமைப்புக்கு அமைய செயற்பட வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பிரதமராக நேற்று மாலை ஹிந்த ராஜபக் பதவியேற்ற பின்னர், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரிவின், டிவிட்டர் பக்கத்திலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் நிகழ்வுகளை அமெரிக்கா அவதானித்துக் கொண்டிருக்கிறது. அனைத்து தரப்புகளும் இலங்கையின் அரசியலமைப்புக்கு அமைய செயற்படுமாறும், வன்முறைகளில் இருந்து விலகி, சரியான வழிமுறைகளை பின்பற்றுமாறும், நாம் அழைப்பு விடுகிறோம்.

இலங்கை அரசாங்கம், ஜெனிவாவில் அளித்த மனித உரிமைகள், மறுசீரமைப்பு, பொறுப்புக்கூறல், நீதி, மற்றும் நல்லிணக்கம் தொடர்பான வாக்குறுதிகளை நிலைநாட்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்என்றும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

எனினும், புதிய பிரதமராகப் பதவியேற்ற ஹிந்த ராஜபக் தொடர்பாக அமெரிக்கா இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. அவருக்கு வாழ்த்துக் கூறவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top