தூபியில் ஏறிப் புகைப்படம் எடுத்த
தென் கிழக்குப்
பல்கலைக்கழக
மாணவர்கள் விடுதலை
ஹொரவ்பொத்தான,
கிரலாகல தூபியில்
ஏறிப் புகைப்படங்கள்
எடுத்தமைக்காகக் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த
தென் கிழக்குப்
பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேரும், கெப்பித்திகொல்லாவ நீதிமன்றத்தால் இன்று (05) விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கு,
கெப்பிட்டிகொல்லாவ நீதவான் எச்.கே.மாலிந்த
ஹர்சன த
அல்விஸ்
முன்னிலையில் இன்று விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இம்மாணவர்களுக்கு
எதிராக மூன்று
குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
மரங்களுக்கு
இடையில் குளறுபடிகளை
ஏற்படுத்தியமை, சட்டவிரோதமான முறையில் ஒன்று சேர்ந்தமை, தொல்பொருள் திணைக்களத்துக்குச்
சொந்தமான இடத்தில்
அனுமதி இல்லாமல்
நுழைந்த குற்றச்சாட்டுகள்
இவர்கள் மீது
சுமத்தப்பட்டிருந்தன.
இவற்றில்,
முதலாம் இரண்டாம்
குற்றச்சாட்டுகளுக்கு அரச செலவாக
தலா 1,000 ரூபாய்
அபராதம் செலுத்துமாறும்
மூன்றாவது குற்றச்சாட்டுக்கு
தலா 50,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறும், நீதவான்
கட்டளையிட்டார்.
எட்டு
பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் மூன்று சட்டத்தரணிகள் சிராஸ் நூர்தீன், சப்ராஸ் ஹம்சா, ருஷ்தி ஹபீப்குழுவினர் கெபித்திகொல்லாவ
நீதிமன்றில் 45 நிமிடங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் வாதாடினர்.
குறித்த
8 சந்தேகநபர்களும் இன்றைய கடந்த 24ஆம் திகதி கெபிதிகொல்லாவ
நீதவான் நீதிமன்றில்
முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு
இன்று பெப்ரவரி 05 ஆம் திகதி
வரை விளக்கமறியல்
விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கி.பி. 3 ஆம்
நூற்றாண்டு கால தொல்பொருள் வரலாற்றைக் கொண்ட
குறித்த தொல்பொருள்
கட்டடம் மீது
ஏறிய விடயம்,
தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும்
என்பது குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை
மற்றும் அம்பாறை
பிரதேசங்களைச் சேர்ந்த குறித்த மாணவர்கள், கடந்த
வருடம் (2018) ஜனவரி மாதம் தங்களது விடுமுறையின்போது ஹொரவப்பொத்தானை
நகருக்கு அண்மித்த,
கிரலாகலவிலுள்ள குறித்த பகுதி உள்ளிட்ட பல்வேறு
பிரதேசங்களுக்கு சென்றுள்ளனர். இதன்போது பல்வேறு இடங்களிலும்
இவ்வாறு புகைப்படங்களை
எடுத்துள்ளனர்.
குறித்த
புகைப்படங்கள் கடந்த வருடம் ஜனவரி மாதத்தில்
சமூக வலைத்தளத்தில்
பகிரப்பட்டுள்ள நிலையில் அவை தற்போது சமூக
வலைத்தளங்கள் மூலம் பரவியதை அடுத்து, இப்பிரச்சினை
பூதாகரமாக மாறியிருந்தது.
இதேவேளை,
தூபியின் மீது
அதனை அவமதிக்கும்
வகையில் நாம்
ஏறவில்லை எனவும்,
குறித்த விடயம்
தொடர்பில் தாங்கள்
உரிய அறிவின்மை
காரணமாகவும் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக
அம்மாணவர்கள் பொலிசாரிடம் வாக்குமூலம் வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment