2019.07.19 ஆம் திகதியன்று நடைபெற்ற
அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்



01. அடிப்டை ஆய்வு தொடர்பான ரஷ்ய மன்றம் மற்றும் தேசிய விஞ்ஞான மன்றத்திற்கிடையில் சமூகவியல் ஓத்துழைப்புத் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ( நிகழ்ச்சி நிரலில் 06 ஆவது விடயம்)

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கிடையில் விஞ்ஞானம் தொழில் நுட்பம் மற்றும் புதிய தயாரிப்புக்கள் தொடர்பான கருத்துக்கள் தகவல்கள் மற்றும் திறனாற்றல்களை பரிமாறிக்கொள்ளும் பொருட்டு மேலதிக சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுத்தல் மற்றும் இரண்டு நாடுகளிக்கிடையிலான ஆய்வாளர்களுக்கிடையே புரிந்துணர்வு தொடர்புகளை நிலைநிறுத்திக் கொள்வதை நோக்காக்கொண்டு அடிப்படை ஆய்வு தொடர்பாக ரஷ்ய மன்றம் மற்றும் இலங்கை தேசிய விஞ்ஞான மன்றத்துக்கு இடையில் சமூகவியல் புரிந்துணர்வு தொடர்பான உடன்படிக்கையை எட்டுவதற்காக அமைச்சரவை அந்தஸ்து அற்ற விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் அய்வுத் துறையின் அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. பிரேசில் சாவோ பாவுலோ ஆய்வு மன்றம் மற்றும் இலங்கையின் தேசிய விஞ்ஞான மன்றத்திற்கிடையில் ஆய்வு புரிந்துணர்வு உடன்படிக்கை (நிகழ்ச்சி நிரலில் 07 ஆவது விடயம்)

இலங்கை தேசிய விஞ்ஞான மன்றம் மற்றும் பிரேசில் சாவோ பாவுலோ ஆய்வு மன்றம் தமது நாடுகளில் விஞ்ஞான துறைக்காக நிதியைப் பயன்படுத்தும் முன்னணி நிறுவனங்களுக்கு இடையில் முன்னணி நிறுவனங்கள் ஆவதுடன் அந்த நிறுவனங்களில் ஆய்வுகள் மத்தியில் விஞ்ஞான ரீதியில் மற்றும் தொழில்நுட்ப புரிந்துணர்வை நடைமுறைப்படுத்தும் நோக்கத்தைக் கொண்ட இருதரப்பிற்கு இடையில் ஆய்வு புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுவதற்காக அமைச்சரவை அந்தஸ்து அற்ற விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் அய்வுத் துறையின் அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. 1980ஆம் ஆண்டு இலக்கம் 44 இன் கீழான வாக்குரிமையாளர்களை பதிவு செய்யும் சட்ட திருத்தம் (நிகழ்ச்சி நிரலில் 06 ஆவது விடயம்)

வருடாந்தம் மேற்கொள்ளப்படும் வாக்காளர்களின் பெயர்ப்பட்டியல் மறுசீரமைக்கும் பணியில் அதில் ஆவணம் உறுதி செய்யப்பட்டப் பின்னர் மற்றும் அடுத்த ஆண்டு வாக்காளர் உரிமை ஆவணத்தில் திருத்தங்களை ஆரம்பிக்கும் வரையிலான காலப்பகுதியில் 18 வயதை பூர்த்தி செய்யும் மற்றும் ஏனைய தேவையான தகுதிகளை பூர்த்தி செய்யும் இளைஞர்களுக்கு வாக்குகளைப் பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் 1980ஆம் ஆண்டு இலக்கம் 44 கீழான வாக்காளர் உரிமையாளர்களின் பதிவு செய்தல் சட்டத்தில் திருத்தத்திற்கு அமைவாக திருத்த சட்ட மூலத்தை மும்மொழிகளில் அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதனை தொடர்ந்து அந்த திருத்த சட்டமூலத்தின் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

04. 1956ஆம் ஆண்டு இலக்கம் 47 இன் கீழான பெண்கள் இளைஞர் மற்றும் சிறுவர்களை சேவையில் ஈடுபடுத்தும் சட்டத்தின் கீழ் ஆபத்தான தொழில் பட்டியலை வர்த்தமானியில் கட்டளைகளில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் (நிகழச்சி நிரலில் 11ஆவது விடயம்)

1956 ஆம் ஆண்டு இலக்கம் 45 இன் கீழான பெண்கள் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை சேவையில் ஈடுபடுத்தும் சட்டத்தின் கீழ் 2019ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட கட்டளையின் மூலம் 18 வயதுக்குக் குறைந்த இளைஞர்களக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சேவைக்கான 51 சந்தர்ப்பங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன. இருப்பினும் தற்பொழுது சேவை மேற்கொள்ளும் சுற்று வட்டம் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றமடைந்திருப்பதுடன் சிறுவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய உடலியல் மன நலம் மற்றும் நன்னடத்தை மேம்பாட்டுக்கு தடையை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு 77 தொழில்வாய்ப்புக்கான சந்தர்ப்பங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன. இதற்கமைவாக 2019 ஆம் ஆண்டில் உத்தேச ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய தொழில் கட்டளைகளுக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் அந்த அனுமதி கிடைத்த பின்னர் சம்பந்தப்பட்ட கட்டளைகளை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்காக அமைச்சரவை அந்தஸ்து அற்ற தொழில் மற்றும் தொழிற் சங்க அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. கைத்தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகள் (நிகழ்ச்சி நிரலில் 12ஆவது விடயம்)

1942ஆம் ஆண்டு இல 45 கீழான கைத்தொழிற்சாலை சட்டம் தொடர்பில் முக்கிய பணி ஊழியர்களின் தொழில் பாதுகாப்பு சுகாதாரம் ஆகியவற்றைப் போன்று அவர்களது சேம நலத்தை முன்னெடுப்பதற்கு உதவும் வகையில் தொழிற்திணைக்களத்தினால் தொழிற்சாலைகளை பரிசோதித்தல் அவசியம் ஆகும். இந்த சட்டத்தின் ஒழுங்குவிதிகள் 65 வருடங்களாக நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் இதற்காக இதுவரையில் சில விதிகள் மாத்திரமே தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக பயனுள்ள வகையில் சட்டத்தை வலுப்படுத்துவதற்கு வசதி செய்வதை கவனத்தில் கொண்டு இந்த சட்டத்திற்கு அமைவாக தொழிற்சாலைகளை பதிவு செய்தல் மற்றும் தொழிற்சாலை கட்டிடங்களை அனுமதித்தல் நீராவி பொயிலர்களை பதிவு செய்தல் நீராவி பொயிலர்கள் மற்றும் ஏனைய அழுத்தங்களுடனான பாத்திரங்களை பரிசோதித்தல் தொடர்பான சான்றிதழ்களை வழங்குதல் அதிக ஓசையிலிருந்து ஊழியர்களை பாதுகாத்தல் மற்றும் வேலைத்தளத்திற்கு போதுமான ரீதியில் வெளிச்சத்தை வழங்குதல் மற்றும் இதுதொடர்பான விடயங்களுக்கான பொது உடன்பாட்டு உத்தரவை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் இந்த அனுமதி கிடைத்த பின்னர் சம்பந்தப்பட்ட கட்டளையை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்காக அமைச்சரவை அந்தஸ்து அற்ற தொழில் மற்றும் தொழிற் சங்க அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. 1895ஆம் ஆண்டு இல 6 இன் கீழான உத்தியோகபூர்வ சீருடை கட்டளைச்சட்டத்தை பரிசோதணை செய்து புதிய திருத்த சட்ட மூலத்தை சமர்ப்பித்தல் (நிகழ்ச்சி நிரலில் 15ஆவது விடயம்)

சிவில் ஊழியர்களினால் உத்தியோகபூர்வ சீருடை அணிவதை வரையறுத்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதலுக்காக 1895ஆம் ஆண்டு இல 6 இன் கீழான உத்தியோகபூர்வ சீருடை கட்டளைச் சட்டம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் இராணுவ சீருடைக்கு சமமான சீருடையை ஆடைகள் துணிகளை வைத்திருக்கும் சந்தர்ப்பம் மற்றும் நபர்களினால் அலங்காரமாக இராணுவ காட்டு சீருடைகளுக்கு சமமான வர்ணத்தைக் கொண்ட ஆடைகளை பயன்படுத்துவது பிரபல்யமடைந்து வருகின்றமை அவதானி;க்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை தேசிய பாதுகாப்பு தொடர்பில் மிகவும் பாதகமான வகையில் பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக தற்பொழுது உள்ள சட்டம் காலத்திற்கு பொருத்தமான வகையில் தயாரிப்பதன் அவசியம் அடையாளங் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக தற்பொழுது ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்வதற்காக சட்ட அறிமுகப்படுத்துவதற்கென 1895 இல 6 இன் கீழான உத்தியோகபூர்வ சீருடை சட்டத்தை ஆய்வு செய்வதற்கும் உத்தியோகபூர்வ சீருடை சட்டத்திற்கான புதிய திருத்த சட்ட மூலத்தை தயாரிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற ரிதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. இரத்மலானை கந்தவல வத்தையில் அமைந்துள்ள ஒரு பகுதிக் காணியை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒதுக்கீடு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 37 ஆவது விடயம்)

இரத்மலானை கந்தவல வத்தை என்ற இடத்தில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்பட்டிருந்த 80 பேர்ச் காணியில் 37.16 பேர்ச் காணியை இதில் தற்பொழுது குடியிருப்போருக்கு கொள்வனவு உறுதிகளை வழங்கக் கூடிய வகையில் சுதந்திர கொடுப்பனவு என்ற ரீதியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்;தி அதிகார சபைக்கு வழங்குவதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. தேயிலை ஏற்றுமதி மீது விதிக்கப்படும் தேயிலை மேம்பாடு மற்றும் விற்பனை வரியில் திருத்தத்தை மேற்கொள்ளல் (நிகழ்ச்சி நிரலில் 37 ஆவது விடயம்)

1975ஆம் ஆண்டு இல 14 கீழான இலங்கை தேயிலை சபை சட்டத்தில் ஒழுங்குவிதிகளுக்கமைய ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து 1 கிலோ தேயிலைக்காக 3.50 வரி பதிவுசெய்யப்பட்ட தேயிலை ஏற்றுமதியாளர்களிடம் அறவிடப்படுகின்றது. தற்பொழுத தேயிலை ஏற்றுமதியின் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ள ஏனைய நேரடி மற்றும் மறைமுக வரியைப் போன்று பொருளாதார சேவைக் கட்டணத்தினால் தேயிலை தயாரிப்பு செலவுகள் மேலும் அதிகரிக்கும் என்பதினால் தேயிலை மேம்பாட்டு மற்றும் விற்பனை வரியை 1 கிலோவிற்கு ரூபா 3.00 ஆக திருத்துவதற்கான கட்டளை திருத்த சட்ட மூலத்தயாரிப்பின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதற்கும் அதன் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக பெருந்தோட்டத் துறை அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. சிறுதேயிலை மற்றும் இறப்பர் தோட்ட மீள ஊக்குவிக்கும் திட்டம் கிராமிய நிதிக்கூறுகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் வட்டி நிவாரணத்தைப் பெற்றுக் கொடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 41ஆவது விடயம்)

விவசாயத்திற்காக சர்வதேச நிதியத்தின் நிதியுதவி மற்றும் தேசிய நிதியங்களின் பங்களிப்பின் அடிப்படையில் சிறிய தேயிலை மற்றும் இறப்பர் தோட்ட மறுசீரமைப்பு திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக இதுவரையில் ஒப்பந்தம் ஒன்று உண்டு. இந்த திட்டத்தில் முக்கிய அங்கம் தேயிலையை மீண்டும் உற்பத்தி மற்றும் இறப்பர் புதிய உற்பத்தி செய்யப்படுகின்றன. தேயிலையை மீண்டும் உற்பத்தி செய்வதில் தேயிலை செடியின் குறிப்பிட்ட கால எல்லை கடந்த போதிலும் கொழுந்தை பறிக்கக் கூடிய உற்பத்தி செடிகள் அகற்றப்படுவதினால் மீண்டும் உற்பத்தி செய்யப்படும் தேயிலைக் கன்றுகளிலிருந்து தேயிலை கொழுந்தை பறிக்கும் சந்தர்ப்பம் வரையில் வளரக்கூடிய தேயிலை உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் வருமானத்தை ஓரளவுக்கேனும் உள்வாங்குவதற்கும் இறப்பர் புதிய உற்பத்தியில் பாலை எடுக்கக் கூடிய சந்தரப்பம் வரையில் உற்பத்தியாளர்களுக்கு ஏதேனும் வருமானம் பெற்றுக் கொள்வதற்காக சுய தொழில் வாய்ப்பில் அல்லது வருமானத்தை பெற்றுக் கொள்வதில் ஈடுபடுத்துவதற்கு கிராமிய நிதிக்கூறு திட்டத்தில் உள்வாங்கி அதனை நடைமுறைப்படுத்துவதற்காக பெருந்தோட்டத் துறை அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. பால மல்வத்து ஓயா நீர்த்ததேக்க திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 43 ஆவது விடயம்)

அரசாங்கத்தின் ஒன்றிணைக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி பால மல்வத்து ஓய நீர்த்ததேக்கத்தை நிர்மாணிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த திட்டத்தை இந்த வருடத்தில் ஆரம்பிக்கக் கூடிய வகையில் நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. 1988அம் ஆண்டு இல 68 இன் கீழான உர முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்ததை மேற்கொள்ளல் (நிகழ்ச்சி நிரலில் 45 ஆவது விடயம்)

உர இறக்குமதி தயாரிப்பு வகுத்தல் விநியோகித்தல் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கும் அவற்றின் அங்கமான விடயங்களுக்கான விதிமுறைகளை மேற்கொள்வதற்காக 1988ஆம் ஆண்டு இல 68இன் கீழ் உர ஒழுங்குபடுத்தல் சட்டம் நிறைவேறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் ஒழுங்குவிதிகள் தற்போதைய தேவைக்கு பொருந்தக் கூடிய வகையில் திருத்தத்தைமேற்கொள்ளப்பட வேண்டும் என்று அடையாளங் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக உர பகுப்பாய்வகம் அபராத நிதிச் திருத்தம் மற்றும் கட்டளை பிறப்பிக்க்கூடிய கள அறிவிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு உரத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக சட்டத்தில் திருத்த சட்ட மூலத்தை தயாரிப்பகாக விவசாய கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் நீரியியல் வள அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. சார்க் பிராந்திய நாடுகளில் சிறு எண்ணிக்கையிலான விவசாயிகளின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தவதற்கான திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 46 ஆவது விடயம்)

சிறிய அளவிலான விவசாயிகளின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் நோக்கில் சிறிய அளவிலான விவசாய வர்த்தகர்களின் செயல் அபிவிருத்தியின் மூலம் சார்க் பிராந்திய நாடுகளின் சிறிய அளவிலான விவசாயிகளின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த திட்டம் சார்க் அபிவிருத்தி நிதியம் மற்றும் தேசிய நிதியங்களின் அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்காக விவசாய கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. மத்திய அதிவேக வீதித் திட்டத்தில் அபேபுஸ் - குருநாகல திருகோணமலை 006 வீதி மற்றும் குருநாகல் இடைமத்திய நிலையம் தொடர்பில் புதிய நுழைவாய் வீதியை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 48 ஆவது விடயம்)

அரசாங்கத்தின் முக்கிய திட்டமான மத்திய அதிவேக வீதி திட்டத்தில் மீரிகம தொடக்கம் குருநாகல் வரையிலான இரண்டாவது கட்டத்தை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு 006 வீதியில் உள்வாங்குவதற்கும் வெளியேறுவதற்கான வசதி வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பிரதான நகர மாநகரத்தின் ஊடாக பொதுமக்களுக்கு 006 வீதியில் பிரவேசிப்பதற்கும் வெளியேறுவதற்குமான வசதிகளை செய்வதற்கும் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் குருநாகல் மற்றும் பிரதான நகரம் மாநகரம் திருப்பி செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும்; வகையில் குருநாகல் 006 வீதி ஏனைய தொடர்புகளை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு 1.1 கி.மீ நிலையத்தைக் கொண்ட புதிய தொடர்புக்கான வீதியொன்றை சமர்ப்பிப்பதற்காக மாநகர நிதி அபிவிருத்தி மற்றும் கனிய வள அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்  வழங்கியுள்ளது.

14. இலங்கை மற்றும் டென்சானியா விற்குமிடையில் இருதரப்பு விமான சேவைக்கான உடன்படிக்கை (நிகழ்ச்சி நிரலில் 52 ஆவது விடயம்)

இலங்கை மற்றும் டென்சானியா ஐக்கிய குடியரசிற்கும் இடையில் விமான சேவை உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. 2018 டிசம்பர் மாதத்தில் கென்னியாவில் இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பட்ட விடயங்களின் அடிப்படையில் அதன் உடன்படிக்கை திருத்தத்தை மேற்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்காக போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. மகளிருக்கு உதவுக்கூடய கையடக்க சேவைக்காக ஒன்றிணைக்கப்பட்ட மேடையை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 55 ஆவது விடயம்)

பெண்களுக்கு எதிராக அனைத்து வகையிலும் வேறுபாடு காட்டுதல் பெண்களின் உரிமையை மீறுதல் இடையுறுகள் செய்தல் மற்றும் அனைத்து வகையிலான நடவடிக்கைகள் சந்தரப்பங்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு ஒத்துழைப்பு மற்றும் நிவாரணத்தை வழங்கும் நோக்கில் தொலைபேசி இலக்கம் 1938 ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் மகளிருக்கு உதவும் தொலைபேசி சேவையொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதிலும் உள்ள பெண்களுக்கு 24 மணித்தியாலம் துரிதமாக உடனடி பெறுபேறை பெற்றுக் கொடுப்பதற்கு இந்த தொலைபேசி சேவை மேம்படுத்தவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக இடையூறு மற்றும் தாக்குதல்கள் குறித்து தலையிடுவதந்கு அதிகாரிகளுக்கு பாதுகாப்பான வகையில் அறிக்கையிடுவதற்காக கையடக்க தொலைபேசியை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிணைந்த மேடையொன்றை அமைப்பதற்காக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மற்றும் வரட்சி வலய அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. தேசிய ஹஜ் சட்டம் (நிகழ்ச்;சி நிரலில் 57ஆவது விடயம்)

தேசிய ஹஜ் சட்டத்தை வகுத்து சட்ட திருத்த மூலத்தை சமர்ப்பிப்பதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக உம்ரா யாத்திரைக்கான ஒழுங்குறுத்துவதற்கான ஒழுங்கு விதிகளை உள்வாங்குவதற்கும் உத்தேச சட்டத்தை ஹஜ் மற்றும் உம்ரா சட்டம் என்ற ரீதியில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17.ருஹுணு பொருளாதார அபிவிருத்தி கூட்டுத்தாபன சட்டத்திற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 58 ஆவது விடயம்)

ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்டு விஷேட பொருளாதார வலயத்தை அமைப்பதை நோக்கமாகக் கொண்டு தெற்கு பிரதேச அபிவிருத்தி பணிகளை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்காக ருஹுணு பொருளாதார அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்காக திருத்த சட்ட மூல தயாரிப்பு பிரிவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்த சட்ட மூலத்தில் ருஹுணு பொருளாதார அபிவிருத்தி கூட்டுத்தாபன திருத்த சட்ட மூலத்தை அரசாங்கத்தின் அதி விசேட வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதன் பின்னர் திருத்த சட்ட மூலத்திற்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக துறைமுகங்கள் கப்பல் துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் விமானங்களை பேணி பாதுகாப்பதற்கு தேவையான மேலதிக 2 இன்ஜின்களை கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 65 ஆவது விடயம்)

ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் மற்றும் சி எப் எம் நிறுவனத்துக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையின் ஒழுங்கு விதிகளுக்கமைய -ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் விமானங்களை பேணிப்பாதுகாப்பதற்காக சி எப் எம் இன்டர்நெஷனல் நிறுவனத்திடம் மேலதிக LEAP  இன்ஜின்கள் 2 கொள்வனவு செய்வதற்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. ஹியூமன் இமுனொக்லோபின் 5-6 கிராமைக் கொண்ட 45 000 மருந்து குப்பிகளை கொள்வனவு செய்வதற்கான பெறுகை (நிகழ்ச்சி நிரலில் 68 ஆவது விடயம்)

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபார்சுக்கு ஹியூமன் இமுனொக்லோபின் 5-6 கிராமைக் கொண்ட 45 000 மருந்து குப்பிகளுக்கான பெறுகையை இந்தியாவிலுள்ள Reliance Life Science (Pvt) Ltd என்ற நிறுவனத்திடம் பெற்றுக்கொள்வதற்காக 4.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்காக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்ரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

20. சோடியம் குளோரைட் திரவ பிவி0.9 %W/V  அல்லது சோடிம் குளோரைட் மருந்து ஊசி யுஏ எஸ் பி 0.9 %W/V  500 மில்லி மீற்றரை கொண்ட 10 000 000 போத்தல்களை விநியோகிப்பதற்கான பெறுகை (நிகழ்ச்சி நிரலில் 69 ஆவது விடயம்)

பெறுகை மேன்முறையீட்டு சபையின் சிபாரிசுக்கு அமைய சோடியம் குளோரைட் திரவம் பிவி 0.9%W/V   அல்லது சோடியம் குளோரைட் மருந்து ஊசி யுஏ எஸ் பி 0.9%W/V   500 மில்லி மீற்றர் கொண்ட 10 000 000 போத்தல்களை விநியோகிப்பதற்கான பெறுகையை இந்தியாவிலுள்ள M/S Aculife healthcare Privet Limited  என்ற நிறுவனத்திடம் பெற்றுக் கொள்வதற்காக 2.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்காக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்ர் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்ரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

21. சூரிய எரிசக்கி திட்டம் 2 இன் கீழான நிகழ்ச்சி நிரலில் அம்பாறை, ஹபரண, கிறீட் துணைக்கோபுரம் இரண்டுக்காக சூரிய மின் சக்கி உற்பத்தி நிலையத்தை நிர்மானித்தல் (நிகழ்ச்சி நிரலில் 70 ஆவது விடயம்)

சூரிய எரிசக்தி மின் உற்பத்தி திட்டத்தின் கீழ் 2ஆவது ம்பாறை கிறீட் கோபுரத்திட்டத்திற்கான 7 திட்டங்கள் வீதம் தொடர்பு படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள தலா ஒரு மெஹா வோல்ட் சூரிய சக்தி 7 திட்டங்கள் மற்றும் கிறிட் துணைக் கோபுர திட்டத்துக்காக தலா 7 திட்டங்கள் வீதம் தொடர்பு படுத்துவதற்கு உத்தேசிக்கப்ட்டுள்ள தலா ஒரு மெஹா வோல்ட் படி 7 மின் சக்தி திட்டங்களை முதலீட்டுக்களுக்காக வழங்குவதற்கும் அது தொடர்பான மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையை எட்டுவதற்காக இலங்கை மின்சாரசபைக்கு அதற்கான அதிகாரத்தை வழங்குவதற்காக மின் சக்தி மற்றும் எரி சக்தி அமைச்சர் சமர்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top