21/4 தாக்குதலில் தொடர்புடைய
அனைவருக்கும் மரணதண்டனை
ஜனாதிபதி தெரிவிப்பு
ஈஸ்டர்
ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை
வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன தெரிவித்துள்ளார்.
பெலேந்த
ரஜமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தாது கோபுரம், நூல்
நிலையம் மற்றும் சமய உரை மண்டபம் ஆகியவற்றை மகாசங்கத்தினரிடம் கையளிக்கும் புண்ணிய
நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (16) பிற்பகல்
இடம்பெற்றது.
பெலேந்த
ரஜமகா விகாரை நிகழ்வில் உரையாற்றிய அவர்,
“21/4 குண்டுத் தாக்குதல்களுடன்
தொடர்புடையவர்கள் அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு
எதிராக தெளிவான சாட்சியங்கள் இருப்பதால், அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும்.
இந்த
தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்றும்
அவர் தெரிவித்துள்ளார்.
சங்கைக்குரிய
பிம்புரே உதித்த மகாநாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் அமைச்சர் ராஜித்த
சேனாரத்ன, மேல் மாகாண சபையின் முன்னாள்
உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர் யு.டி.சி.ஜயலால்
உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment