கன்னியாவில் போராட்டம் நடத்த

தமிழ் மக்களுக்கு தடை

பிக்குமாரை அழைத்து 
தமிழர் பிரச்சினைகளை தீர்க்கலாம் 
என கிளம்பியோரே!
மறைவிடத்தில் இருந்து வெளியே வாருங்கள்...
என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


திருகோணமலை - கன்னியா வெந்நீரூற்றில் தமிழர்களால் பாரம்பரியமாக வழிபாடு செய்யப்பட்டு வந்த பிள்ளையார் கோவிலை இடித்து விட்டு, அந்த இடத்தில் விகாரை கட்டும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதற்கு எதிராக நேற்று நடத்தப்படவிருந்த போராட்டம், பொலிஸாரால் தடுக்கப்பட்டது.

நேற்றுக்காலை இந்தப் போராட்டம் கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவில் பகுதியில் நடைபெறவிருந்தது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்க, வடக்கில் இருந்தும், கிழக்கில் இருந்தும் பெருமளவு மக்கள் ஒன்று கூடியிருந்தனர்.

குறித்த நேரத்தில் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு செல்ல முயன்ற தமிழ் மக்களை, சுமார் 1 கி.மீ தொலைவிலேயே பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

இந்தப் போராட்டத்தினால் குழப்பம் ஏற்படும் என்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து, அதற்கு தடை உத்தரவு பெற்றிருந்த பொலிஸார் , போராட்டம் நடத்த சென்றவர்களை தடுத்தனர். இதனால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது.

இதன்போது, சிங்களவர்கள் சிலர், போராட்டம் நடத்த முற்பட்ட தமிழர்கள் மீது வெந்நீரை ஊற்றியதால் பதற்றநிலை தோன்றியது.

இதையடுத்து, பிள்ளையார் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி கோரிய போது, அதற்கும் பொலிஸார் அனுமதி மறுத்தனர்.

இதனால் அந்த இடத்திலேயே இருந்த வழிபாடுகளை நடத்தி விட்டு, போராட்டம் நடத்த சென்றவர்கள் திரும்பிச் சென்றனர்.

இதேவேளை, ஒரு பெண்மணி என்றும் பாராமல் கன்னியாவின் அந்த காணிக்கு உரித்தாளர் கோகிலாமணி அம்மா மீதும் சுடுநீர் வீச்சு தாக்குதல் நடந்துள்ளது. இது ஏற்புடையதா?

அரசியல் தீர்வை இன்னும் இரண்டு வருடங்களில் பெறலாமென யாழ்ப்பாணத்தில் ரணில் கூறிய அடுத்த நாளே இவை நடந்துள்ளன.

தமிழருக்கு இலங்கைத்தீவில் அரசியல் தீர்வு வாழ்நாளில் கிடைக்காதென நேற்றைய நிகழ்வு கோடிட்டுக் காட்டியுள்ளது.

ஒரு பிக்குவின் மீது விரல் பட்டிருந்தால் முதல் ஆளாக முந்திக்கொண்டு சகவாழ்வு பேசியிருக்கும் எமது அரசியல்வாதிகள்...

பிக்குமாரை அழைத்து தமிழர் பிரச்சினைகளை தீர்க்கலாம் என கிளம்பியோரே!

மறைவிடத்தில் இருந்து வெளியே வாருங்கள்... என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
















0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top