அமைச்சர்  மனோ கணேசனின் 
முகநூல் பதிவின்
உண்மையான நோக்கம்
ஆதங்கமா? அல்லது நக்கலா?
மக்கள் கேள்வி


தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர்  மனோ கணேசன் தனது முகநூலில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்றுக்கு என்ன நோக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பொறுப்பு வாய்நத ஒரு அமைச்சர் அதுவும் சமூக நல்லிணக்கத்துக்குப் பொறுப்பான அமைச்சர் இப்படி பதிவிட்டுள்ளது குறித்து மக்கள் கவலை வெளியிடுகின்றனர். 

இந்தத் தகவலை அமைச்சர் பதிவேற்றியதன் உண்மையான நோக்கம் ஆதங்கமா? அல்லது நக்கலா? என்றும் கேள்வி எழுப்பப்படுகின்றது.

நீங்கள் எதற்காக இந்த பதிவை பதிவு செய்துள்ளீர்கள் என்று உங்களுடைய உள்நோக்கம் வெளிப்படையாகத் தெரிகிறது முஸ்லிம்கள் சவூதி அரேபியாவை ஒருபோதும் பின்பற்றவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் எங்களுடைய புனித குர்ஆன் எதைச் சொல்கிறதோ எங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் எதை செய்து காட்டி இருக்கிறார்கள் அதைத்தான் நாங்கள் செய்வோம்
நாடுகளைப் பொறுத்த மட்டில் சவூதி அரேபியாவும் ஒன்றுதான் அமெரிக்காவும் ஒன்று தான் இதைவிட பல களியாட்ட விடுதிகள் துபாயில் இருக்கிறது தேவை என்றால் அங்கு போய் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள் ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சராக இருந்து கொண்டு இவ்வாறான பதிவுகளை பதிவு செய்வது உங்களுடைய தரத்தை நீங்களே தாழ்த்திக் கொள்வதற்கு சமமாகும் என்றும் இவரின் இக்கருத்துக்கு எதிர் கருத்தும் பதிவிடப்பட்டிருக்கிறது.

விமல் வீரவன்ஸவின் கையிற்றை அமைச்சர் விழுங்கிவிட்டாரா? பொருத்தமான அமைச்சை வைத்துக்கொண்டு அமைச்சுக்கு  பொருத்தமற்ற ஒருவராக அமைச்சர் மனோ கணேசன் கருத்துக்களை பதிவிடுகின்றார் எனவும் இவரின் கருத்துக்கு எதிராக மக்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதோ அமைச்சர் மனோ கணேசனின் பதிவு.....
இதோ, சவுதி அராபியாவின் செங்கடல் நகரின் (Red Sea city) கிங் அப்துல்லா அரங்கில், ஜூலை 18ம் திகதி, நடைபெறவுள்ள ஜெட்டா உலக விழாவில் (Jeddah World Fest), தன் உடலை ஆட்டி, காட்டி, ஆடும், பாடும் அனகொன்டா என்ற செல்லப்பெயர் கொண்ட உலகப்பிரசித்தி பெற்ற பெண் ரெபர் பாடகி நிகி மினாஜ் ((female rapper Nicki Minaj) பாடி ஆட போகிறார். சமீப காலமாக, திடீரென சிலிர்த்து எழுந்துள்ள, சவுதி அராபியா, Mariah Carey, Enrique Iglesias, the Black Eyed Peas, Sean Paul, David Guetta, Tiesto ஆகிய பாடற்குழுக்களை அழைத்து நாட்டை உலுக்கி, குலுக்கி வருவதன் தொடர்ச்சியாம், இதுவும்!



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top