இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக
7 முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றவுள்ளதாக
பொதுபல சேனா அமைப்பு அறிவிப்பு!


இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக 7 தீர்மானங்களை நிறைவேற்றவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டியில் இடம்பெறவுள்ள மாநாட்டியிலேயே இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

இம்மாநாடு குறித்து பொதுபலசேனா அமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவிக்கையில்,

நாளை மறுதினம் பிற்பகல் 2 மணிக்கு கண்டிபோகம்பர மைதானத்தில் மாநாடு ஆரம்பமாகவுள்ளது. மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னர் காலை 9 மணியளவில் கண்டிதலதா மாளிகையில் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளதோடு, இதில் நூற்றுக்கணக்கான பௌத்த மதகுருமார்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அத்தோடு கட்சி பேதமின்றி சகல அரசியல் தலைவர்களுக்கும் பொது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டின் பிரதான நோக்கம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முற்றாக இல்லாதொழிப்பதோடு, அனைத்து இன மக்களையும் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதின் கீழ் நெறிப்படுத்துவதாகும். எனவே இதற்கு அனைத்து இன மக்களும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பின்னரே அரசாங்கமும், ஏனைய தரப்புக்களும் இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து கவனம் செலுத்தின. ஆனால் பொதுபலசேனா அமைப்பு இதனை ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வந்தது.

எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் போன்று இனியொரு பயங்கரவாத் தாக்குதல் இடம்பெற்றுவிடக் கூடாது என்பதில் பொதுபல சேனா தொடர்ந்தும் செயற்படும். அதற்கான முதல் நடவடிக்கையாக இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top