தற்கொலை தாக்குதலை ஆதரிக்கும் மற்றுமொரு
இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பும் இலங்கையில்
விமல்வீரவன்ஸ கட்சியின் ஊடகப் பேச்சாளர்
முஸ்ஸம்மில் தெரிவிப்பு
இலங்கையில் ஜமாத்தே இஸ்லாமி என்ற மற்றுமொரு அடிப்படைவாத அமைப்பு இயங்குவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸம்மில் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள ஜமாத்தே இஸ்லாமி என்ற அமைப்பின் பிரதிநிதிகள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையிலும் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த அமைப்பு தற்கொலை தாக்குதல்களை ஆதரிக்கும் தற்கொலை குண்டுதாரிகளை ஏற்றுக்கொள்ளும் அமைப்பு என்பது அந்த அமைப்பை பற்றி தேடியதில் தெரியவந்துள்ளது.
பாரம்பரிய இஸ்லாம் சமய நடைமுறைகளுக்கு புதிய திருத்தங்களை செய்து, அவற்றை அறிமுகப்படுத்தி இந்த அமைப்பு செயற்பட்டு வருகிறது. தவ்ஹித் அமைப்பினர் தற்கொலை தாக்குதல்களை நடத்தி இஸ்லாமிய அரசை உருவாக்க முயற்சிப்பவர்கள்.
ஜமாத்தே இஸ்லாமி என்ற அமைப்பு மிகவும் தந்திரமான பொருளாதார மற்றும் வர்த்தக துறைகளில் இருந்தவாறு தமது திட்டங்களை வகுத்து வருகிறது. இந்த அமைப்பு இந்தியாவில் பல மாநிலங்களில் தடைசெய்யப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் நீதிமன்றம், இந்த அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்துள்ளது. ஜமாத்தே இஸ்லாமி என்ற இந்த அமைப்புக்கு எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவம் என்ற அமைப்புடனும் தொடர்புள்ளது. மக்கள் விடுதலை முன்னணி ஒழுங்கு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.
மக்கள் விடுதலை முன்னணி உருவாக்கும் புதிய கூட்டணியில், தற்கொலை தாக்குதல்களை ஆதரிக்கும், இஸ்லாமிய அரசுக்காக செயற்படும் ஜமாத்தே இஸ்லாமி என்ற இந்த அமைப்பும் உள்ளது. முஸ்லிம் அடிப்படைவாதம், மக்கள் விடுதலை முன்னணியை விழுங்கியுள்ளது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என்ற அமைப்பு 2015 ஆம் ஆண்டு தேர்தலில் சஹ்ரானின் உதவியை பெற்றுக்கொண்ட அமைப்பு. இந்த அமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டணியில் உள்ளது எனவும் மொஹமட் முஸ்ஸமில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment