இலங்கையில்
ஜனநாயகம் உள்ளதா
ஜனாதிபதி,
பிரதமருக்கு என்ன அதிகாரம்??????
ரிஷாட் பதியுதீனுக்கு
அமைச்சுப் பதவியை
கொடுத்துப்
பார்க்கட்டும்
நாடு முழுவதையும் ஒன்று திரட்டுவேன்!
ரத்ன தேரர் பகிரங்க எச்சரிக்கை
முடியுமானால்
ரிஷாட் பதியுதீனுக்கு
அமைச்சுப் பதவியை
கொடுத்துப் பார்க்கட்டும் என தாம் அரசாங்கத்திடம்
சவால் விடுவதாக
நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர்
தெரிவித்துள்ளார்.
ஊடகம்
ஒன்றுக்கு வழங்கிய
செவ்வியில் இதை குறிப்பிட்டுள்ளார்.
அதுரலியே
ரத்ன தேரர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ரிஷாட்
பதியுதீனுக்கு அமைச்சுப்பதவி வழங்கப்படுமானால்
நாடு முழுவதும்
உண்ணாவிரதத்தில் ஈடுபட நேரிடும் என்றும் அவர்
எச்சரித்துள்ளார்.
ச.
தொ .ச
வாகனத்தைச் சட்டவிரோதமாகப் பயங்கரவாத செயல்களுக்கு வழங்கினார்
என்பது உட்பட
பல குற்றச்சாட்டின்
பேரில் முன்னாள்
அமைச்சர் ரிஷாத்
பதியுதீனுக்கு எதிராக தாம் பொலிஸ் திணைக்களத்தில்
பல முறைப்பாடுகளை
முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான
முறைப்பாடுகளை 30 நாட்களுக்குள் பரிசீலனை செய்து முடிக்க
இயலாது என்றும்
நாடாளுமன்றத் தெரிவுக்குழு அதனால்தான் அவரை குற்றங்களிலிருந்து
விடுவிப்பதாக குறிப்பிட்டுள்ளது என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள்
அமைச்சர் ரிஷாத்
பதியுதீனுக்கு எதிராக முழு நாட்டையும் உண்ணாவிரதத்துக்காக
அணி திரட்டுவோம்
என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment