முன்னாள் முஸ்லிம் அமைச்சர்கள் கொடுத்த
ஒருமாத காலக்கெடு நிறைவு!
அடுத்தகட்ட நகர்வு குறித்துத்
தீர்மானிக்க உள்ளதாக தெரிவிப்பு
முஸ்லிம்
அமைச்சர்கள் அரசுக்கு கொடுத்த ஒருமாத காலக்கெடு
நாளை 3ஆம்
திகதியுடன் நிறைவடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.
பௌஸி தெரிவித்துள்ளார்.
ஊடகம்
ஒன்றுக்கு அவர்
வழங்கிய விசேட
நேர்காணலில் இதை குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற
உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸி
தொடர்ந்து தெரிவிக்கையில்,
முஸ்லிம்
சமூகம் சமீப
காலமாக எதிர்கொண்டுவரும்
நெருக்கடிகள், சவால்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத்தருமாறு
வலியுறுத்தி கடந்த மாதம் மூன்றாம் திகதி
அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க
அமைச்சர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் அரசுக்கு
காலக்கெடு விதித்து
தமது பதவிகளை
இராஜினாமா செய்திருந்தனர்.
இந்த
நிலையில், முஸ்லிம்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு கொடுத்த காலக்கெடு
நாளை மூன்றாம்
திகதியுடன் நிறைவடைகின்றது.
ஆகவே
எதிர்வரும் 10ஆம் திகதி அனைத்து முஸ்லிம்
நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூடி ஆராய்ந்து அடுத்தகட்ட
நகர்வு குறித்துத்
தீர்மானிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ரிஷாத்
பதியுதீன் எம்.பி. மீதான
குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்படாமையும், நாடாளுமன்ற தெரிவுக்குழு
முன்னிலையில் அவர் அளித்த சாட்சியம் இதனை
நிரூபித்திருப்பதாகவும் நாடாளுமன்ற குழு
தெரிவித்திருக்கின்றது.
இவற்றை
எல்லாம் கவனத்தில்
எடுத்து முஸ்லிம்
எம். பி.க்கள் குழு
அடுத்த கட்ட
நகர்வுக்கு செல்லவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment