முஸ்லிம் மக்கள் அச்சுறுத்தல்களை
எதிர்நோக்கி வருகின்றனர்
கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகளை தடுக்கவும்,
பலவந்த கைதுகளை நிறுத்தவும்
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை



இலங்கையில் முஸ்லிம் மக்கள் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருவதாக மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகளை தடுக்கவும், பலவந்த கைதுகளை நிறுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கை வாழ் முஸ்லிம்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வாழ் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களை தண்டிக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உண்டு என்ற போதிலும், ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி சங்குலி தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top