மருத்துவர் ஷாபியை விடுவிப்பதே உகந்தது;
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்தது !
பயங்கரவாத
செயற்பாடுகளுடன் எந்தவித தொடர்புகளுமற்ற குருநாகல் வைத்தியர்
ஷாபியை பயங்கரவாத
தடைச் சட்டத்தின்கீழ்
தொடர்ந்தும் வைத்திருப்பது முறையல்ல என குற்றப்
புலனாய்வுத் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக
தகவல் கிடைத்துள்ளது.
ஊடகமொன்று
இந்தத் தகவலை
வெளியிட்டுள்ளது.
குறித்த
வைத்தியர்மீது பயங்கரவாத செயல்களுடன் தொடர்புபட்ட எந்தவொரு
குற்றசாட்டுக்களும் இல்லாத நிலையில்
அவரை முறையற்ற
நிலையில் அந்த
சட்டத்தின்கீழான தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக
மேற்படி திணைக்களம்
சுட்டிக்காட்டியுள்ளது.
குருநாகலைச்
சேர்ந்த வைத்தியர்
ஷாபி 1978 ஆம்
ஆண்டின் 49 ஆம் இலக்க பயங்கரவாத தடைச்
சட்டத்தின் 9 (1) பிரிவின் கீழ் கடந்த மே
27 ஆம் திகதி
முதல் 90 நாட்கள்
தடுப்புக் காவலில்
வைக்கப்பட்டுள்ளார்.
இந்த
நிலையில் குறித்த
வைத்தியரிடம் விசாரணைகளை மேற்கொண்டுவந்த சீ.ஐ.டி அவர்மீதான
பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள்
இல்லை எனத்
தெரிவித்து அவரை விடுவிப்பதே உகந்தது என
பாதுகாப்பு அமைச்சுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது.
இதேவேளை
ஷாபிக்கு எதிராக
பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள்
இல்லை என்று
தாம் ஏற்கனவே
குருநாகல் நீதிமன்றில்
தெரிவித்துள்ளதாகவும் சீ.ஐ.டி மேலும்
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment