போதைப்பொருள் விற்று ஆயுதப் போராட்டமா ?
தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்தி
உளறியிருக்கிறார் மைத்ரி
- சுமந்திரன் M.P ஆத்திரம் !



போதைப்பொருள் வர்த்தகம் நடத்தியே தமிழர் ஆயுதப் போராட்டம் நடந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சொல்லியிருப்பது ஒட்டுமொத்த தமிழர் போராட்டத்தையே கொச்சைப்படுத்தும் செயல். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். வரலாறு தெரியாமல் உளறுதல் சரியல்ல...”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் , ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரன் எம். பி தெரிவித்துள்ளார் .

இன்று காலை கொழும்பில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரபாகரன் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு ஆயுதப் போராட்டத்தை நடத்தியதாக குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் கடும் விசனத்தை வெளியிட்டு அதற்கு பதில் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி மேலும் தெரிவித்திருப்பதாவது ,

பிரபாகரன் நடத்திய போராட்டத்திற்கு தமிழ் மக்களின் ஆதரவு இருந்தது. புலம்பெயர் தேசங்களில் இருந்து தமிழர்கள் அதற்கு பெருமளவான நிதிப் பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.இந்த பின்னணியில் வரலாறு தெரியாமல் உளறி இப்படி ஜனாதிபதி கூறுவது முற்றுமுழுதான தவறு.அதனை நான் கண்டிக்கிறேன்.இது ஆயுதப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஒரு பொய்த்தகவல்.இப்படி ஒரு குற்றச்சாட்டு முன்னெப்போதும் இருந்ததில்லை.” இப்படி சுமந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top