மரணதண்டனை அமுல்படுத்துவது தொடர்பாக
நாடாளுமன்றத்தில் விவாதித்த பின்னரே
அது குறித்து முடிவெடுக்கப்படும்
வெளிநாட்டு தூதுவர்களிடம்
பிரதமர் ரணில்
மரணதண்டனை
அமுல்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதித்த பின்னரே
அது குறித்து
முடிவெடுக்கப்படும் என பிரதமர்
ரணில் விக்ரமசிங்க
தெரிவித்துள்ளார்.
மரணதண்டனை
அமுலாக்கத் தீர்மானம் தொடர்பில் இன்று காலை
கொழும்பில் வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து கலந்துரையாடிய
போதே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மரணதண்டனை
விதிக்கப்பட்டுள்ள கைதிகளில் நால்வருக்கு
அதனை நிறைவேற்றுவதற்கு
தான் கையொப்பமிட்டுள்ளதாக
ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன ஊடகநிறுவன
பிரதானிகளுடன் கடந்தவாரம் நடத்திய சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.
மரணதண்டனையை
மீளவும் இலங்கையில்
அமுல்படுத்தும் ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு
எதிராக உள்ளநாட்டிலும்
சர்வதேசத்திலும் பெரும் எதிர்ப்புக்கள் எழுந்த வண்ணம்
உள்ளன.உள்நாட்டில்
நீதிமன்றங்களிலும் இதற்கு எதிராக
வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுவருகின்றன.
இந்தநிலையிலேயே
இன்று காலை
கொழும்பில் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த பிரதமர்
ரணில் மேற்கண்டவாறு
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment