துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின்
குடும்பத்தினருக்கு ஆறுதல்
தெரிவிக்கச்சென்ற
பிரியங்காவை தடுத்து நிறுத்தி
பண்ணை வீட்டில் காவலில் வைத்த பொலிஸார்
உத்தரபிரதேசம் மாநிலத்தின் சோன்பத்ரா எனும் இடத்தில் சமீபத்தில் இரு பிரிவினருக்கிடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆதரவு கூற காங்கிரஸ் கட்சியின் உபி மாநில கிழக்குப்பகுதி பொறுப்பாளரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா நேற்று காணச் சென்றார்.
நாராயண்பூர் எனும் பகுதியில் பொலிஸார் பிரியங்கா காரை தடுத்து நிறுத்திய பொலிஸார், இங்கு வர அனுமதி இல்லை என கூறியுள்ளனர்.
உடனடியாக பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தொண்டர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார். கலவரத்தில் ஈடுபட்டவர்களை சந்திக்காமல் போகப் போவதில்லை என கூறினார் பிரியங்கா காந்தி.
இதையடுத்து, அவரை பொலிஸார் தடுத்து நிறுத்தி அருகில் உள்ள மிர்ஸாபூர் பண்ணை வீட்டில் காவலில் வைத்தனர்.. அங்கும் அவர் தர்ணாவில் ஈடுபட்டார். இரவிலும் தர்ணா போராட்டம் நடந்தது. நேற்று காலையும் சோன்பத்ரா செல்ல பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் இந்த இடத்தைவிட்டுச் செல்லமாட்டேன் என்று பண்ணை இல்லத்திலேயே தங்கினார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை பிரியங்கா நேற்று சந்தித்தார். அப்போது அவர்களின் கண்ணீரைத் துடைத்து விட்டு அருந்துவதற்கு குடிநீர் அளித்து ஆறுதல் வார்த்தைகளை கூறினார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சோன்பத்ரா எனும் இடத்தில் சமீபத்தில் இரு பிரிவினருக்கிடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..
0 comments:
Post a Comment