பெண்களிடம் சேஷ்டை புரிந்த இளைஞனை
பொலிஸ் நிலையத்தில்
ஒப்படைத்த பொதுமக்கள்
வீதியால்
சென்ற இரு
பெண்களிடம் தகாதமுறையில் நடந்துகொண்ட இளைஞன் ஒருவனை நையப்புடைத்த
பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம்
ஒன்று கல்முனையில்
இடம்பெற்றுள்ளது.
நேற்று
சனிக்கிழமை(6) மாலை 5மணியளவில் பாண்டிருப்பு கல்முனை
எல்லை வீதியில்
இடம்பெற்ற சம்பவத்தில்
காயமடைந்த
நிலையில் கல்முனை
பொலிஸ் நிலையத்தில் இளைஞன்ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த
இளைஞன் தனியார்
நிறுவனம் ஒன்றின்
லொறி உதவியாளர்
என தெரிவிக்கப்படுவதோடு
இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment