கல்முனைப் பகுதியில் முதியவர் ஒருவர்
தூக்கில் தொங்கி தற்கொலை!
கல்முனைப்
பகுதியில் முதியவர்
ஒருவர் தூக்கில்
தொங்கி தற்கொலை
செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நோய்
தாக்கத்தின் காரணமாகவே குறித்த முதியவர் இந்த
விபரீத முடிவினை
எடுத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த
சம்பவம் இன்று
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் இடம்பெற்றதாகக் கூறப்படுள்ளது.
கல்முனை
1 டி பிரிவு
சி.பி.எப் வீதியில்
உள்ள தனது
வீட்டின் முன்னால்
கூரைச் சட்டத்திலேயே
குறித்த முதியவர்
தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இவ்வாறு
உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த புஞ்சி
அப்பு கந்தசாமி
(வயது-65) என
பொலிஸார் குறிப்பிட்டனர்.
இச்சம்பவம்
தொடர்பில் மேலதிக
விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment