மரண தண்டனையை நிறைவேற்ற
உச்ச நீதிமன்றம்
இன்று இடைக்கால தடை உத்தரவு
மரண
தண்டனையை நிறைவேற்ற
உச்ச நீதிமன்றம்
இன்று இடைக்கால
தடை உத்தரவு
பிறப்பித்துள்ளது.
அதற்கமைய
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி
வரை இந்த
தடை உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உச்ச
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை
மனுவை ஆராய்ந்த
மூன்று நீதியரசர்கள்
அடங்கிய நீதிபதிகள்
குழாம் இந்த
உத்தரவை பிறப்பித்துள்ளது.
மரண
தண்டனை விதிக்கப்பட்ட
குற்றவாளிகளுக்கு அடுத்து சில நாட்களில் மரண
தண்டனை நிறைவேற்றப்படும்
என ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் இடைக்கால தடை
உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த
வருடம் ஏற்பட்ட
அரசியல் நெருக்கடியின்
போதும் ஜனாதிபதிக்கு
எதிராக உயர்
நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
அரசியலமைப்பை
மீறி நாடாளுமன்றத்தை
கலைத்தார் என
மனு தாக்கல்
செய்யப்பட்டிருந்தது. இதற்கு ஆதரவாக
உயர் நீதிமன்றம்
தீர்ப்பளித்திருந்தது.
இந்நிலையில்
இன்றைய தினமும்
ஜனாதிபதியால் அமுல்படுத்தப்பட்ட மரண தண்டனை நடைமுறைக்கும்
உயர் நீதிமன்றம்
இடைக்கால தடை
உத்தரவு வழங்கியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment