அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தால்,
முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு அடி கூட படவிட மாட்டோம்.
முஸ்லிம் கடைகளை பகிஷ்கரிக்க இடமளியோம்
வீரவங்ச தெரிவிப்பு



எமது அரசாங்கம் ஒன்று பதவிக்கு வந்தால், முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு அடிக் கூட படவிட மாட்டோம். முஸ்லிம் கடைகளை பகிஷ்கரிக்க நாங்கள் இடமளிக்க மாட்டோம் எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம், எந்த முஸ்லிம் பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

வஹாபிசத்தை பாதுகாத்து, முஸ்லிம் சமூகத்தை ஓரங்கட்டிய தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக முஸ்லிம் மக்கள் அடுத்த தேர்தலில் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் வீரவங்ச கூறியுள்ளார்.

நுகோகொடையில் நேற்று மாலை நடைபெற்ற வஹாபிச அடிப்படைவாதத்திற்கு எதிராக கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த அரசாங்கத்தில் சாதாரண முஸ்லிம் எவருக்கும் பிரச்சினைகள் ஏற்பட இடமளிக்க மாட்டோம். அச்சம் காரணமாக முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு சிங்கள மக்கள் போவதில்லை. இந்த அச்சத்தை போக்கி முஸ்லிம் வர்த்தகர்களின் வியாபாரத்தை முன்னேற்றவும் எங்களுக்கு முடியும். இதற்கு அடுத்த தேர்தலில் இந்த அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டை முஸ்லிம் மக்கள் எடுக்க வேண்டும்.

முஸ்லிம் அவ்வாறு செய்து, எமது அரசாங்கம் ஒன்று பதவிக்கு வந்தால், அந்த முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு அடிக் கூட படவிட மாட்டோம். முஸ்லிம் கடைகளை பகிஷ்கரிக்க நாங்கள் இடமளிக்க மாட்டோம். எனவே இது ஒரு தேசிய போராட்டம். வஹாபிச அடிப்படைவாதம், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் எனவும் விமல் வீரவங்ச மேலும் தெரிவித்துள்ளார்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top