கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில்
நோயாளிகளை பார்வையிடுவதற்கு
நடைமுறைக்கு பொருத்தமான
அனுமதி இல்லை
மக்கள் கடும் எதிர்ப்பு
கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் பாதுகாப்பு
ஊழியர்களுக்கும் நோயாளிகளை பார்வையிட வருகை தந்த பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட இழுபறியினால் பதற்ற நிலை ஏற்பட்ட்தாக
தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை
அஸ்ரப் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை ஞாயிற்றுக்கிழமை (14) மாலை பார்வையிட வந்த மக்களுக்கும் வைத்தியசாலையில்
கடமையாற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால்
இப்பதற்றம் ஏற்பட்ட்தாக அறிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்
நோயாளிகளை பார்வையிடுவதற்கு அனுமதி விடயத்தில் நடைமுறைக்கு பொருத்தமான பாஸ்
நடைமுறை முறையாக அமுல்படுத்தாமை காரணமாகவும் வைத்தியசாலைக்கு வரும் பொதுமக்கள்
காத்திருப்பதற்கு ஒரு நிழல் குடை அமைக்கப்படாமையாலும் வெயிலில் நின்ற பொதுமக்கள் சலிப்படைந்தவர்களாக முக்கிய வீதி
ஒன்றை இடைமறிக்கும் வகையில் தங்கள்
உரிமைகள் மீறப்படுவதாக கூறி குழுமி நின்றனர்.
இதனால்
அவ்வீதியால் பயணம் செய்தவர்கள் பெரும் சிரமங்களை மேற்கொண்ட நிலையில்
இப்பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பதற்காக பொதுமக்களில் சிலர் அவ்வழியே
பயணித்த ஊடகவியலாளர்களின் உதவியை நாடினர்.
இதன் போது
குறித்த வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நாடிய ஊடகவியலாளர்கள் குழு
இவ்விடயத்தை சுமூகமான தீர்வை கண்டு மக்களின் அடிப்படை உரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டனர்.
இந்த
விடயத்தை கல்முனை அஸ்ரப் வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஏ.எல்.எப்.றஹ்மானை சந்தித்து கதைக்க வேண்டும்
என ஊடகவியலாளர்கள் கூறினர்.இதனால் குறித்த ஊடகவியலாளர்களை வைத்தியசாலைக்குள் அனுமதித்த பாதுகாப்பு
உத்தியோகத்தர்கள் கல்முனை அஸ்ரப்
வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்
இருக்கின்ற அறையை காட்ட அழைத்து சென்று பின்னர் அவர் அங்கில்லை என்றும் அவர்
கொழும்பிற்கு சென்று விட்டதாகவும் கூறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை
அடுத்து ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு தரப்பினரை அணுகி இந்த பிரச்சினைக்கு தீர்வு
கண்டு பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும்
இன்றி நோயாளர்களை சென்று பார்வையிட அனுமதிக்குமாறு பாதுகாப்பு தரப்பை கேட்டு
சென்றனர்.
இந்நிலையில்
அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை கல்முனை மருதமுனை போன்ற தூர இடங்களில் இருந்து
கால்கடுக்க வெயிலில் காத்திருந்த மக்கள் அனைவரும் குறித்த வைத்தியசாலையின்
பின்வாசல் நுழைவாயிலில் இருந்து வைத்தியசாலைக்குள் வந்துவிட்டனர்.
அதுவரைக்கும்
மேற்குறித்த இடைமறிக்கப்பட்ட வீதி
பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிப்பாலும் போக்குவரத்துக்கு தொடர்ந்து தடையாக
இருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த
பாஸ் நடைமுறையில் உள்ள தடைகளை ஆராய்ந்து
உடனடி நடவடிக்கைகளை குறிப்பாக அஸ்ரப்
ஞாபகார்த்த வைத்தியசாலை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து
பொதுமக்களின் அடிப்படை உரிமையை மறுத்து
மனிதபிமானம் இன்றி இழுபறி நிலை
தொடராமல் இருக்க கல்முனை அஸ்ரப் வைத்தியசாலை
வைத்திய அத்தியட்சகர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பிரதேச
மக்களால் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.